சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இதுதான் தரம்".. பிரதமர் மோடிக்கு என்ன பரிசு தந்தார் தெரியுமா.. டெல்லியில் கெத்து காட்டிய ஸ்டாலின்

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் புத்தகம் பரிசாக தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு தந்த பரிசு பற்றிதான் சோஷியாமீடியா முழுவதும் பேச்சாக இருக்கிறது.. மோடிக்கு, அப்படி என்னதான் பரிசு தந்தார் முக ஸ்டாலின்?

இதுவரை எத்தனையோ முதல்வர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து திரும்பியிருக்கிறார்கள்.. ஆனால், முக ஸ்டாலினின் டெல்லி பயண பரபரப்பு மட்டும் இன்னமும் அடங்கவில்லை..

 8 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பஸ் சேவை? மருத்துவ வல்லுனர் குழு பரிந்துரை 8 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பஸ் சேவை? மருத்துவ வல்லுனர் குழு பரிந்துரை

டெல்லி சென்று பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக ஸ்டாலின் அளித்தது முதல், 3 நாள் டெல்லியில் தங்கியிருந்த அனைத்து செய்திகளும் சோஷியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

 திமுக தலைவர்

திமுக தலைவர்

ஆனால், ஒரே ஒரு செய்தி மட்டும் வெளியே வராமலேயே இருந்தது.. அதுதான் பிரதமருக்கு முதல்வர் தந்த முக்கியமான பரிசு..! நாட்டின் பிரதமரை சந்திப்பதும், மாநிலம் தொடர்பாக கோரிக்கை மனு அளிப்பதும் முதல்வர்களின் வழக்கமாக சம்பிரதாயம் என்றாலும், இந்த முறை ஸ்டாலினின் பயணத்தில் "தமிழின்" நெடி அதிகமாகவே தென்பட்டது..!

 வணக்கம்

வணக்கம்

பிரதமருக்கு தமிழில் "வணக்கம்" சொல்லி உள்ளார்.. பிறகு தன்னுடைய பரிசாக, "செம்மொழி சிற்பிகள்" என்ற புத்தகத்தைதான் ஸ்டாலின் பிரதமருக்கு தந்துள்ளார். தான் அளித்துள்ள மனுவில், 13வது பிரிவில் இடம்பெற்றிருந்த தமிழில் மொழி குறித்த கோரிக்கையில் தமிழை, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கவேண்டும் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருந்தாலும், இந்த புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமருக்கு ஸ்டாலின் பொறுமையாக எடுத்து சொல்லி உள்ளார்.

சிறப்பு

சிறப்பு

தமிழ்மொழியின் சிறப்புக்கு காரணமாக 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களின் நூல்கள் அவர்களின் உருவ சித்திரம் போன்றவைகள் அடங்கியதாம் இந்த செம்மொழி சிற்பிகள் என்ற அந்த நூல்... தமிழை போற்றி பாதுகாக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது..

Recommended Video

    Sonia Gandhi-க்கு Stalin கொடுத்த புத்தககம்.. இதுக்கு பின்னால இவ்வளோ விஷயம் இருக்கா?
     பரிதி இளம்வழுதி

    பரிதி இளம்வழுதி

    2010ல் கோவை செம்மொழி மாநாடு நடத்துவதாக முடிவு செய்யப்பட்டபோதே, இந்த செம்மொழி மாநாட்டையொட்டி ஏதாவது புதியதாக செய்யவேண்டும் என்று அப்போதைய திமுக ஆட்சியின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்த பரிதி இளம் வழுதி விரும்பினார்.. அப்போதுதான் 100 தமிழறிஞர்கள் பற்றி எழுதுவதென முடிவாகி உள்ளது. ஆனால், இந்த ஒவ்வொருவர் பற்றியும் முழுமையாக படித்து எழுதுவது என்பது அவ்வளவு சுலபம் இலை.. ஒவ்வொருவரை பற்றியும் ஒவ்வொரு தகவலாக திரட்டி எழுதிமுடிக்க 6 மாதகாலம் ஆகி உள்ளது..

     கருணாநிதி

    கருணாநிதி

    இதை செம்மொழி மாநாட்டில் வெளியிட்டது மறைந்த கருணாநிதி ஆவார்.. இவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்த செம்மொழி சிற்பிகள் புத்தகத்தைதான் பிரதமருக்கு ஸ்டாலின் வழங்கி உள்ளார்... அதுமட்டுமல்ல, சமீபகாலமாகவே எந்த முக்கிய தலைவர்களை, ஸ்டாலின் சந்தித்தாலும், இதுபோன்று புத்தகங்களை பரிசாக வழங்குவதை கடைப்பிடித்து வருகிறார்.. அந்த வகையில்தான், சோனியா காந்திக்கு வழங்கியதை போலவே, பிரதமருக்கும் பரிசாக புத்தகம் வழங்கப்பட்டுள்ளது..!

     ஆதிக்கம்

    ஆதிக்கம்

    நீதிமன்றத்தில், மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலவி வருகிறது. மறுபக்கம், ஹிந்தி திணிப்பு, சமஸ்கிருதத்தை திணிக்கும் செயலையும் கடந்த காலத்தில் அதிகமாகவே பார்த்தோம்.. இந்த நிலையில், தமிழ் மொழிக்கான கோரிக்கையை வலியுறுத்தியதுடன், தமிழிலேயே வணக்கம் சொல்லி, தமிழ் புத்தகத்தையும் பரிசாக தந்து தமிழ்நாடு திரும்பியுள்ளார் தமிழின தலைவரின் மகன்..!

    English summary
    MK Stalins gift to the PM Modi and its importance
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X