சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ராஜதந்திரி".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராகுல்.. "நான் பார்த்துக்கறேன்".. "கதர்"கள் ஷாக்.. என்னாச்சு?

திமுக காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: கூட்டணியில் சிக்கல், இழுபறி என்று சொல்லப்பட்ட நிலையில், காங்கிரஸும் திமுகவும் இணைந்தே தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும் என்று தெரிய வந்துள்ளது.. அப்படியானால் கடந்த 4 நாட்களாக திமுகவில் நடந்ததுதான் என்ன? இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் யூகத்தின் அடிப்படையில் நமக்கு தந்த சில தகவல்களை இங்கே சுருக்கி தந்துள்ளோம்.
"இந்த முறை திமுகவுக்கு வெற்றி வெற்றாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. இதையும் தவறவிட்டுவிட்டால், 15 வருஷம் ஆட்சியில் இல்லாத நிலை ஏற்படும்.. அத்துடன் கட்சியை நடத்துவதிலும் நிறைய சிக்கல்கள் ஏற்படும். அதனால்தான் பல வியூகங்களை கையில் எடுத்துள்ளது.

அதில் ஒன்று கூட்டணி கட்சிகள்.. இந்த கூட்டணி கட்சிகளில் முக்கியமானது காங்கிரஸ் கட்சி.. ஆனால், இந்த தேசிய கட்சியின் பலம் இப்போது குறைந்துள்ளது.. குறிப்பாக தமிழகத்தைவிட புதுச்சேரியில் மிக மோசமான நிலைமையில் காங். உள்ளது.. நாராயணசாமி மீது 5 வருஷமாக அதிருப்தி உள்ளது.. சொந்த கட்சிக்காரர்களே அவர் மீது புகார் சொல்கிறார்கள்.. கிரண்பேடிக்கு டஃப் தர அவரால் முடியவில்லை.

துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்குது.. சசிகலா உயிருக்கு ஆபத்து.. திவாகரன் பகீர் புகார்துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்குது.. சசிகலா உயிருக்கு ஆபத்து.. திவாகரன் பகீர் புகார்

 40 சீட்டுக்கள்

40 சீட்டுக்கள்

அதேசமயம், தமிழக காங்கிரஸ் கட்சியோ 40 சீட்டுக்களுக்கு மிஞ்சாமல் வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறது... எப்போதுமே கூட்டணி இல்லாமல் திமுக தேர்தலை சந்தித்ததும் இல்லை. அதேசமயம், காங்கிரஸை கூடவே இழுத்து கொண்டு செல்வதற்கும், பெருவாரியான தொகுதிகளை தருவதற்கும் திமுக தயாராகவும் இல்லை.. எனவேதான் புதுச்சேரியை கையில் எடுத்ததாக தெரிகிறது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸை கழட்டிவிட்டுவிட்டு, ஜெகத்ரட்சகனை முன்னிறுத்தி, இந்த தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.. அப்படியானால் தமிழகத்திலும் இதே நிலைமைதானா? என்ற கேள்வி எழுந்ததுடன் காங்கிரஸ் தரப்பு திமுகவின் இந்த முடிவினால் அதிர்ந்து போய்விட்டது..

அதிருப்தி

அதிருப்தி

விஷயம் சோனியா காந்தி வரை சென்றுள்ளது.. எதற்காக இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டது என்பதையும், தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் வீழ்ந்துவிட்டது என்ற யதார்த்தத்தையும், நாராயணசாமி மீதான அங்குள்ள அதிருப்தியையும், சோனியாவிடம் ஸ்டாலினே எடுத்து சொன்னாராம்.. ராகுல் பிரதமராக வேண்டும் என்றால், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால், தங்கள் முடிவையும் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினாராம். அதுவரை ராகுல் பேச்சையே கேட்டுக் கொண்டிருந்த சோனியா, ஸ்டாலின் பேசிய பிறகு ஓரளவு நிலைமையையும், சூழலையும் புரிந்து கொண்டாராம்.

ராகுல்காந்தி

ராகுல்காந்தி

இதனிடையே, புதுச்சேரி மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், ராகுலிடம், திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஸ்டாலினிடம் பேசுங்க.. அப்போது தான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கம் என்று யோசனை சொல்லி உள்ளார்.. அதன்படியே, ஸ்டாலினுடன் ராகுலும் பேசினாராம். அப்போது, புதுச்சேரி கூட்டணி நீடிக்க வேண்டும் என்று ராகுல் கேட்க, "நான் பார்த்துக்கறேன்" என்று ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொள்கை

கொள்கை

இதற்கு பிறகுதான், தன்னுடைய பேட்டி ஒன்றில், "திமுக கூட்டணி எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தது கிடையாது, ஒருமித்த எண்ணங்கள், கொள்கை சார்ந்த கூட்டணி... கொள்கை அடிப்படையில், இதயங்களால் இணைந்து உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். இறுதியில் ஸ்டாலினின் இந்த முடிவை ஜெகத்ரட்சகனும் ஏற்று கொண்டுவிட்டார்.

அறிக்கை

அறிக்கை

இதற்கு பிறகுதான் ஜெகத், அப்படியே பிளேட்டை திருப்பி போட்டார்.. "தற்கொலை செய்து கொள்கிறேன் என்று நான் சொல்வே இல்லையே, "நாங்கள்" என்றால் காங்கிரசும்தான்" என்று பல்டி அடித்து விளக்கம் தந்தார்.. இறுதியில் அதன்பிறகே ஸ்டாலினின் அந்த அறிக்கை வெளியாகி உள்ளது... அந்த அறிக்கை வெளியாகும்வரை, காங்கிரசுக்கு டென்ஷன் இருந்தது உண்மையே.. இப்போது புதுச்சேரி, தமிழகத்தில் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்று தெரிகிறது.. ஆக, ஒரே ஒரு அறிக்கையின் மூலம், கூட்டணியையும் விட்டுக் கொடுக்காமல், காங்கிரசுக்கும் ஒரு பாடம் கற்பித்துள்ளார் ஸ்டாலின்" என்கின்றனர்.

English summary
MK Stalins Master Strategy in Congress Alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X