சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"முதல்வன்" ஸ்டாலின்.. "எடு அந்த பெட்டியை".. செம ரூட்டை கையில் எடுக்கும் திமுக.. மிரளும் கட்சிகள்!

புதுபுது வியூகங்களை முன்வைத்து ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: மாஸ் பிளான் ஒன்று திமுக தரப்பில் நடந்து வருகிறது.. அதை மட்டும் ஸ்டாலின் நிவர்த்தி செய்துவிட்டால், தமிழக மக்களின் பிரச்சனைகள் ஓரளவு தீர்க்கப்பட்டுவிடும் என்று நம்பப்படுகிறது.

இந்த முறை தேர்தல், திமுகவுக்கு மிக முக்கியமான தேர்தல்.. இதை விட்டுவிட்டால் 15 வருஷம் ஆட்சியில் இல்லாத நிலைமை ஏற்பட்டுவிடும்.. அத்துடன் கட்சியை மேற்கொண்டு திறன்பட நடத்துவதிலும் சிரமம் ஏற்படும்.

அதனால்தான், ஐபேக் டீமை உள்ளே புகுத்தி களம் காண உள்ளது.. இந்த ஐபேக் டீம் இதுவரை எத்தனையோ ஐடியாக்களை உருவாக்கி தந்ததுடன், அதன்படியே திமுக தலைமையும் நடந்து கொண்டு வருகிறது.. ஐபேக் தந்து வரும் மாஸ்டர் பிளான்களில் ஒருசிலது சறுக்கலை தந்தாலும், பல பிளான்கள் சக்சஸை தந்து வருகின்றன.. அவை சாமான்ய மக்களிடமும் எளிதாக சென்றடைந்தும் வருகின்றன.

 கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

தேர்தல் காலங்களில் நூதன பிரச்சாரங்கள், நமக்கு நாமே, கிராம சபை கூட்டம், போன்றவைகள் திமுக சார்பில் நடப்பது வழக்கம்.. அதுபோலவே, திருப்புமுனை மாநாடு என்று ஒன்றை திருச்சியில் திமுக நடத்துவதும் வழக்கம்.. இவ்வளவும் இந்த முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.. அதில் மாற்றமில்லை.. அதேசமயம் இந்த முறை ஐபேக் உள்ளே நுழைந்துள்ளதால், வேறு சில திட்டங்களும் கையில் உள்ளதாம். அதில் ஒன்றுதான் புகார் பெட்டி!

 புகார் பெட்டி

புகார் பெட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை நேடியாக சந்திக்க போகிறாராம் ஸ்டாலின்.. அங்கு ஒவ்வொரு புகார் பெட்டியையும் வைக்க போகிறாராம்.. "முதல்வன்" படத்தில் அர்ஜுன் செய்வாரே, அதே மாதிரிதான்.. ஒவ்வொரு தொகுதியிலும் புகார் பெட்டிக்கான துவக்கத்தை ஸ்டாலின் முன்னெடுக்க போகிறாராம்.. யாருக்கெல்லாம் என்ன புகார் உள்ளதோ, எல்லாவற்றையும் அந்த புகார் பெட்டியில் போடும்படி வலியுறுத்தப்படும். இந்த புகார் பெட்டிகளை ஸ்டாலினே நேரடியாக கண்காணிக்க போவதாக தெரிகிறது.

 தனி துறை

தனி துறை

தேர்தலில் வெற்றி பெற்றவுடன், இந்த புகார் பெட்டிக்காகவே ஒரு தனி துறையை உருவாக்கி, இதற்காகவே ஒரு குழுவையும் அமைத்து, அந்த புகார்கள் மீதான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறதாம். அதுமட்டுமல்ல, இந்த குறை தீர்ப்பதுதான் முதல்வரின் முதல் கடமையாக இருக்குமாம்.. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை? நடக்குமா? நடக்காதா? என்பது நமக்கு தெரியவில்லை.. ஆனால், இந்த புகார் பெட்டிகள் தொகுதிகளில் வைக்கப்படுவது என்பது இதுவரை அரசியல் கட்சிகள் யாரும் செய்யாதது என்பதால், இதற்கு ஓரளவு வரவேற்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

 கல்வி கடன் ரத்து

கல்வி கடன் ரத்து

ஏற்கனவே ஸ்டாலின் அறிவித்திருந்த, நகை கடன் தள்ளுபடி பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.. அதுபோல, கல்வி கடன் ரத்து அறிவிப்பு என்பது ஒட்டுமொத்த மாணவர்களையும் மட்டுமல்லாமல், பெற்றோர்களையும் சேர்த்து குளிர வைத்து வருகிறது.. இவைகளுடன், இந்த புகார் பெட்டி பிளானும் இணைந்தால் பெரும்பாலான மக்களின் ஆதரவும் கிடைக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

 கலந்துரையாடல்

கலந்துரையாடல்

இதுபோலவே 2 வருஷம் முன்பு புகார் பெட்டி குறித்த ஒரு விஷயத்தை திமுக முன்னெடுத்தது.. மாவட்ட செயலர்கள் குறித்த புகார்கள், மனக்குறைகளை, கட்சித் தலைமையிடம் தெரிவிப்பதற்கு வசதியாக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தின்போது புகார் பெட்டி ஒன்று வைக்கப்படும் என்று ஏற்கனவே ஸ்டாலின் தெரிவித்திருந்தார். கட்சி மட்டத்தில் இருந்த ஒரு நடைமுறையை, இன்று பொதுமக்களிடமும் பரவலாக கொண்டு வந்து சேர்க்க திமுக முயன்று வருவதாக தெரிகிறது. எப்படியோ.. மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்..!

English summary
MK Stalins Master Strategy in his Election Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X