சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர் "உள்ளே" இவர் "வெளியே".. வியக்கும் வியூகம்.. சூப்பராக டீல் செய்யும் ஸ்டாலின்.. பூரிப்பில் திமுக

திமுக தலைவரின் கூட்டணி அதிரடிகள் தொண்டர்களை பூரிக்க வைக்கின்றன

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவரின் கூட்டணி கணக்கு சரியான திசையிலேயே போய் கொண்டிருக்கிறது என்றும், விரைவில் திமுகவே ஆட்சிக்கட்டிலில் ஏறும் என்றும் உடன்பிறப்புகள் புளகாங்கிதம் அடைந்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

கூடிய சீக்கிரம் தேர்தல் நடக்க போகிறது என்பதால் அரசியல் களமே பரபரத்து காணப்படுகிறது.. ஆனால் கூட்டணிதான் இன்னும் எந்த பக்கமும் முடிவாகவில்லை.. எதிலும் அவசரப்பட்டு விடக்கூடாது என்பதால், பொறுமையாகவும், நிதானமாகவும் கூட்டணி தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் திமுகவின் வியூகம் சற்று தூக்கலாகவே இருக்கிறது.. உண்மையிலேயே எந்த கட்சிகள்தான் அதன் கூட்டணிக்குள் இருக்கின்றன? பாமக உள்ளே வருமா? கமலுக்கு சான்ஸ் இருக்கிறதா? காங்கிரசுக்கு எத்தனை சீட்தான் தரப்படும்? வைகோ நிலைமை என்ன? என்பன போன்ற பல கேள்விகளும் வட்டமடித்து கொண்டுதான் இருக்கின்றன.

இதெல்லாம் உண்மையா.. அந்த கட்சிக்கு வெறும் இதெல்லாம் உண்மையா.. அந்த கட்சிக்கு வெறும் "2 சீட்"டாமே.. அப்படி நடந்தா பெரிய சிக்கலாய்ருமே!

திமுக

திமுக

இந்த கேள்விகளை தீவிரமான திமுகவினர் சிலரிடம் நாமே முன்வைத்தோம்.. அவர்கள் சொன்னதாவது: முன்னாடி மாதிரி இல்லை தலைவர்.. எதையும் பார்த்து பார்த்து முடிவுகளை எடுக்கிறார்.. இப்பகூட பார்த்தீங்கன்னா எந்த கூட்டணி கட்சியையும் அவர் கழட்டி விடணும்னு நினைக்கவே இல்லை.. காங்கிரசுக்கு ஒரு சீரியஸ்தன்மை வரணும்னு தான் புதுச்சேரி விஷயத்தை அப்படி டீல் செய்தாரே தவிர, காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி வைக்க யோசிக்கவே இல்லை.

ராமதாஸ்

ராமதாஸ்

அதேமாதிரி பாமகவுடன் மறைமுக பேச்சுவார்த்தைன்னு சொல்றாங்க... அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை.. துரைமுருகன் வேண்டுமானால் ஆசைப்பட்டிருக்கலாமே தவிர, தலைவர் அப்படி நினைக்கவே இல்லை.. சென்ற முறையே எம்பி தேர்தலில், பாமகவை தோற்கடிக்கவே வியூகம் அமைக்கப்பட்டது.. அதன்படியே பாமக தோல்வியை சந்தித்தது.. இந்த முறையும் அவங்களை உள்ளே கூப்பிட்டால், எப்படியும் வடமாநிலத்தைதான் கேட்பார்கள்.. ஆனால் வடமாநிலத்திலேயே திமுக பலமாகத்தான் இருக்கிறது.. அதனால் பாமக தேவையே இல்லை. அதனால்தான் ஆரம்பத்தில் இருந்தே பாமகவை பேச்சுவார்த்தை என்ற விஷயத்திற்குள் சேர்க்காமல் வெளியில் வைத்திருந்தது.

மதிமுக

மதிமுக

விசிக, மதிமுகவும் கண்டிப்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஓரளவு சம்மதம் சொல்லிவிட்டார்கள்.. அவர்களின் எம்பிக்கள் கட்சிக்குள் உள்ளதாலும், ஸ்டாலினை முதல்வர் ஆக்கி பார்க்க வேண்டும் என்று இவர்கள் விரும்புவதாலும், பாஜகவுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவும் நிச்சயம் திமுகவின் முடிவுகளுக்கு உடன்படுவார்கள். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

சர்வே

சர்வே

கமலுடன் கூட்டணி வைக்க யோசனை இருந்தது உண்மைதான் போலும்.. ஆனால், மநீம சம்பந்தமாக ஐபேக் எடுத்த சர்வேயில் வெறும் 2 சதவீத வாக்குகள் மட்டுமே அக்கட்சிக்கு இருப்பதாக தெரியவும், அந்த ஐடியாவும் அப்போதே நிறுத்தப்பட்டு விட்டது..

அழகிரி

அழகிரி

அதற்கு பதிலாகத்தான் யாருமே எதிர்பாராத வகையில் அழகிரியை உள்ளே கொண்டு வர முயற்சி நடந்தது.. அதில் வெற்றியும் கிடைத்து விட்டது போல தெரிகிறது.. அழகிரி கேட்ட 2 விஷயங்களையும் கட்சி மேலிடம் செய்து தரும்.. நாளை மறுநாள் அதாவது 30-ம்தேதி அழகிரிக்கு பிறந்த நாள் வருகிறது.. அன்றைய தினம் கண்டிப்பாக அண்ணனுக்கு தம்பி வாழ்த்து சொல்வார் என்றே தெரிகிறது.. ஆக மொத்தம் வியூகம் அமைப்பதில் கலைஞரை விட ஒரு படி ஸ்பீடாக போய் கொண்டிருக்கிறார் தலைவர் ஸ்டாலின்" என்றனர்.

English summary
MK Stalins Master Stroke in TN Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X