சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலின் வாயில் "நாட்டு சர்க்கரை"தான் போடணும்.... நச்சுன்னு சொன்னாரே.. குஷியில் திமுக!

சசிகலாவின் வருகை குறித்த ஸ்டாலினின் கருத்து இன்று வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டாலின் அன்னைக்கு சசிகலா வருகையை பற்றி சொன்னாரே ஞாபகம் இருக்கா.. அதைதான் இன்றைய தினம் உடன்பிறப்புகள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.

நேற்றில் இருந்து தேர்தல் களம் சூடாக தகித்து கொண்டிருக்கிறது.. சசிகலா சென்னைக்கு வந்ததில் இருந்தே ஒருவித எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு வருகின்றன..

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற சூட்சுமம்தான் அனைத்துவித எதிர்பார்ப்புகளுக்கும் காரணமாக இருக்கின்றன..!

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தொடருதா? 3வது அணிக்கு போவீர்களா? திருமாவளவன் பொளேர் பதில்திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தொடருதா? 3வது அணிக்கு போவீர்களா? திருமாவளவன் பொளேர் பதில்

 ரோடு ஷோ

ரோடு ஷோ

சென்னைக்கு சசிகலா வந்தபோது, மெகா "ரோடு ஷோ" நடத்தப்பட்டது... மெனக்கெட்டு டிடிவி தினகரன் செய்த இந்த ஏற்பாட்டை பார்த்து சசிகலா மனம் குளிர்ந்து போனார்.. அதிமுக மிரண்டு போய் பார்த்தது.. ஆனால், திமுகவோ அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தது.. சசிகலாவின் வருகையை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.. அதேசமயம் கவனிக்காமலும் இல்லை.

எம்எல்ஏ

எம்எல்ஏ

சசிகலா சென்னை வருவதற்கு முன்பு, தென்மாவட்ட எம்எல்ஏ ஒருவர், முக ஸ்டாலினிடம் அதிமுக ஆட்சி மேல் மக்களுக்கு ஒருவித அதிருப்தி இருக்கிறது, இப்படியே 3 மாசம் நீடித்தால், நமக்குதான் எல்லா தொகுதியிலும் வெற்றி" என்றார்.. அதற்கு ஸ்டாலின், "எல்லாத்தையும் சசிகலா பார்த்துப்பாங்க... அவங்களால் அதிமுக வாக்குகளும் பிரிய வாய்ப்புள்ளது.

 உள்கட்சி குழப்பம்

உள்கட்சி குழப்பம்

ஏற்கனவே அந்த கட்சியில் குழப்பம் இருக்கு.. இனி அது மேலும் அதிகமாகலாம்.,. இவ்வளவு காலம் ஸ்டாலின் Vs எடப்பாடின்னு பிரச்சாரம் இருந்தது.. இனி சசிகலா Vs எடப்பாடின்னு மாறிடும் பாருங்க.. அதனால், தென் மாவட்டங்களில் இறங்கி ஆட்களை வேலை பார்க்க சொல்லுங்க.. பூத் கமிட்டிகளை பலப்படுத்துங்க." என்றாராம்.. ஸ்டாலின் அன்று சொன்ன வார்த்தைகள் இன்று அப்படியே நடந்து வருகிறது.. அதுமட்டுமல்ல, சென்னைக்கு சசிகலா வந்த சமயம், "இதோ.. பெங்களூருவில் இருந்து ஒருவர் கிளம்பிவிட்டார்; இனி நடக்க வேண்டியது நடக்கும்" என்று ஓபனாகவே போட்டுடைத்தார்..

 கொண்டாட்டம்

கொண்டாட்டம்

"நடக்க வேண்டியது நடக்கும்" என்று ஸ்டாலின் சொன்னாரே, அது இதுதானோ? தளபதி வாய்க்கு சர்க்கரைதான் போடணும் என்று குதூகலித்து வருகின்றனர் திமுகவினர்.. இனி, அமமுக தனியாக தேர்தலை சந்திப்பதாக வைத்து கொண்டாலும், அதிமுகவுக்கு தென்மாவட்டங்களில் அமமுக மட்டுமே தலைதூக்கும்.. மொத்த வாக்குகளும் அதாவது சமுதாய வாக்குகள் பெரும்பாலும் தினகரன், சசிகலாவுக்கு வந்து சேரும்.. இதனால் அதிமுகவின் வாக்கு வங்கி அடிவாங்கும்.. இது திமுகவுக்கு பெரிய பிளஸ்ஆக இருக்க போகிறது என்பதால் திமுகவினர் சந்தோஷம் மேலும் இரட்டிப்பாகி வருகிறதாம்..!

English summary
MK Stalins Sasikala statement becomes viral on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X