சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இதை" மட்டும் செய்யுங்க.. "அதை" நான் தர்றேன்.. தெறிக்க விட்ட ஸ்டாலின்.. மா.செக்கள் குஷி!

திமுகவில் மா.செ.க்கள் கள வேலைகளில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு சூப்பர் ஐடியாவை முக ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களிடம் முன் வைத்திருக்கிறாராம்.. இதனால் திமுக தரப்பே செம குஷியில் இறங்கி வேலை பார்த்து வருகிறது..!

விரைவில் தேர்தல் வர போவதால், அதிமுக, திமுக ஜாம்பவான் கட்சிகள் ஜரூராக வேலையை துவக்கி உள்ளன.. அந்த வகையில் இரு பிரதான கட்சிகளுக்குமே இந்த தேர்தல் மிக மிக முக்கியம்.

ஆனால் இரு கட்சிகளிலுமே கூட்டணிகளில் பிரச்சனை இருக்கிறது.. இரு கட்சிகளிலுமே உட்கட்சி பூசல்களும் இருக்கின்றன.. இன்னும் சீட் ஒதுக்கீடு விவகாரம் ஆரம்பிக்கவில்லை.. யார் யாருக்கு சீட் தரப்படும் என்று தெரிந்தபிறகு, மறுபடியும் சிக்கல்களும், பிரச்சனைகளும், நெருக்கடிகளும் இக்கட்சிகளுக்கு எழ வாய்ப்புள்ளது.

 சீனியர்கள்

சீனியர்கள்

கடந்த முறை எம்பி தேர்தலின்போது, அதிருப்தியாளர்கள், மாஜிக்கள், சீனியர்கள் என பலரும் சீட் கேட்டு தங்கள் தலைமைகளை நெருக்கி வந்தனர்.. ஆனால், அவர்களில் பலருக்கு வாய்ப்பு தர முடியாமல் போனது.. இதன்காரணமாகவே பெரும்பாலானோர் தொகுதிகளில் இறங்கி வேலை பார்க்கவில்லை.. கூட்டணிகளுக்கும் ஒத்துழைப்பு தரவில்லை.. அதனாலேயே வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் இந்த முறை அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்று திமுக இப்போதே உஷாராகி விட்டது.

 மா.செ.க்கள்

மா.செ.க்கள்

கூட்டணிகளுக்கு குறைவாக சீட்டுக்களை தந்துவிட்டு, நாமே பெரும்பாலான இடங்களில் நிற்கலாம் என்று பல மா.செ.க்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியபடியே இருக்கின்றனர்.. மேலும் சிலர் நாமே அனைத்து தொகுதிகளிலும் நிற்கலாம் என்றும் சொல்லி வருகின்றனர்.. இவைகளை எல்லாம் கேட்ட ஸ்டாலின், கூட்டணிகளுக்கு சீட்டுகளை எவ்வளவு குறைவாக தந்தாலும், நம்முடைய மாவட்ட செயலாளர்கள் சிலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

வாய்ப்பு

வாய்ப்பு

அப்படி கிடைக்காமல் போனாலும், களப்பணியில் இறங்கி நம் தொகுதியை வெற்றி பெற வைக்க மா.செ.க்கள் பாடுபட வேண்டும்... அது கூட்டணி கட்சியாக இருந்தாலும் சரி, அவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும்.. அப்படி செய்தால், ஆட்சி அமைந்ததும் அவர்களுக்கு எம்எல்ஏ வாய்ப்பு அல்லது வேறு ஏதேனும் முக்கிய பதவிகள் கட்சியில் வழங்க தயார் என்று சொன்னாராம்.

நம்பிக்கை

நம்பிக்கை

இதை கேட்ட மா.செ.க்களும் குஷியாகி விட்டு, கள வேலைகளில் அதிரடிகளை காட்டி வருகிறார்களாம்.. இதன்மூலம் எந்த ரூபத்தில் அதிருப்தி வந்தாலும் அது எடுபடாமல் போவதுடன், தொகுதிகளில் கூட்டணிகளுக்கு நிச்சயம் மா.செ.க்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, அதிருப்தியாளர்களை தங்கள் கட்சிகளுக்கு இழுப்பது உட்பட எந்த உள்ளடி வேலைகளுக்கும் இனி இடமில்லாமல் போகும்..! திமுகவின் இந்த வியூகத்தை அதிமுகவும் கையில் எடுக்குமா, ஒத்துழைப்பு தருவார்களா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
MK Stalins Strategy in TN Assembly Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X