சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சென்று திடீரென சந்தித்த எம்எல்ஏ கருணாஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கருணாஸ் எம்எல்ஏ, முதல்வர் பழனிச்சாமியை நேரில் சென்று இன்று சந்தித்து பேசினார்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் ஆதரவை திரட்டும் பணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

MLA Karunass sudden meeting with CM Palanisamy

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை சொற்ப ஓட்டுக்கள் கூட வெற்றியை பறித்துவிடும் என்பதால் அனைத்து கூட்டணி கட்சிகளையும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட வைத்து வெற்றி பெற விரும்புகிறார்.

இந்நிலையில் ஏற்கனவே பாமக, தேமுதிக , பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ள அதிமுக, இப்போது கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் ஆதரவையும் பெற்றுள்ளது.

திமுகவில் இருந்து பழ. கருப்பையா விலகல்- கார்ப்பரேட் நிறுவனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு! திமுகவில் இருந்து பழ. கருப்பையா விலகல்- கார்ப்பரேட் நிறுவனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு!

சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிச்சாமியை நேரில் சென்று சந்தித்து கருணாஸ் எம்எல்ஏ அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். இது தொடர்பாக கருணாஸ் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு அளிக்கும் என்றும அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை பிரச்சாரம் செய்யும் என்றும் கூறியுள்ளார்.

இப்படித்தான் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கருணாஸ் சென்றார். அந்த சந்திப்பு கருணாஸ்க்கு ராஜயோகமாக மாறியது. ஜெயலலிதா திடீரென நீங்கள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் எம்எல்ஏவாக போட்டியிடுங்கள் என்று அவருக்கு ஒரு சீட் கொடுத்தார். இதை பின்னாளில் கருணாஸே கூறியிருந்தார்.

English summary
MLA Karunas's sudden meeting with CM Palanisamy, he said support to admk on local body elecion
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X