சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தண்ணீர் பஞ்சம்.. நடுத்தெருவில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு தண்ணீர் பிடித்த திமுக எம்எல்ஏ மாசு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏ மா சுப்பிரமணியன் அந்த தொகுதியில் தண்ணீர் சப்ளை செய்து கொண்டிருக்கிறார்.

பருவமழை இல்லாததாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டதாலும் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் அன்றாடம் தண்ணீருக்காக மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

MLA M.Subramanian is distributing water for Saidapet area

தனியார் லாரிகளில் கூடுதல் விலை கொடுத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை என்ற நிலையே நிலவுகிறது. குடிநீர் வாரியம் லாரிகளில் விநியோகம் செய்து வருகிறது. எனினும் இது போதுமானதாக இல்லை. தனியார் நிறுவனங்களும் சென்னை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினால் மட்டுமே சென்னை மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்க முடியும்.

பீகாரை வாட்டுகிறது வெப்பம்.. 17 பேர் உயிழந்த பரிதாபம்பீகாரை வாட்டுகிறது வெப்பம்.. 17 பேர் உயிழந்த பரிதாபம்

திமுகவினர் ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதன்படி சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் அந்த தொகுதியில் தண்ணீர் சப்ளையில் ஈடுபட்டுள்ளார்.

திருப்போரூரில் இருந்து தினமும் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ஒரு லாரி தண்ணீர் காலையிலும், மாலையில் ஒரு லாரி தண்ணீரும் கொண்டு வரப்படுகிறது.

இந்த தண்ணீரை தெரு, தெருவாக தினமும் காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று விநியோகிக்கிறார்.

English summary
MLA M.Subramanian is distributing water for Saidapet area as Chennai is in water crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X