சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அக்ரி வீட்டு கல்யாணத்துக்கு வராதீங்க.. முதல்வருக்கு தடா போடும் அதிமுக எம்எல்ஏ!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகைக்கு ஆளும் கட்சி எம்எல்ஏ திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்கு ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மகன் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருவண்ணாமலை செல்ல உள்ளனர்.

ஆனால் இந்த திருமணத்திற்கு முதல்வரை வர வேண்டாம் என்கிறாராம் கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறாராம்.

முத்துக்குமார சாமி

முத்துக்குமார சாமி

விஷயம் வேற ஒன்னுமில்லை.. வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இல்ல விழாவில் முதல்வர் பங்கேற்றால் அது அதிமுகவுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் நினைக்கிறார்.

கீரியும், பாம்பும்

கீரியும், பாம்பும்

அதனால்தான் முதல்வரை விழாவுக்கு வேண்டாம் என்கிறாராம். இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது. மாவட்ட அரசியலில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும், பன்னீர்செல்வமும் கீரியும், பாம்புமாக மோதி வருகிறார்கள்.

நிலுவையில் உள்ளது

நிலுவையில் உள்ளது

இந்த நேரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு முதல்வர் வருவதை எம்எல்ஏ பன்னீர்செல்வம் விரும்பவில்லை. அதனால்தான் நிலுவையில் உள்ள வழக்கை எல்லாம் ஞாபகப்படுத்தி வர வேண்டாம் என்று சொல்கிறாராம்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

ஆக மொத்தம், எது உண்மையான காரணம் என தெரியவில்லை என்றாலும், ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. முதலமைச்சர் ஒரு கல்யாணத்துல கூட நிம்மதியாக கலந்துகொள்ள முடியாத நிலைமை நம்ம தமிழ்நாட்டிலதான் இருக்கு.

English summary
ADMK MLA Panneer selvam opposed to Edapadi Palanisamy's Thiruvannamalai visit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X