• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாஜகவுக்கு தாவ தயாராகிவிட்டாரா?.. திமுக எம்எல்ஏ கேள்வி

|

சென்னை: திமுக மீது பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விடும் மாஃபா பாண்டியராஜன் அடுத்த கட்சியில் தாவுவதற்கு தயாராகி வருகிறாரா என எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து திமுக எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில் டிவி மற்றும் சமூகவலைதளங்களில் உலா வரும் தவறான செய்திகளுக்கு பொதுவாக கருத்து தெரிவிக்க மாட்டேன். எனினும் தமிழ் தொலைகாட்சி சேனலில் தேவையில்லாத ஒரு வீடியோ கிளிப்பிங் உலா வரும் நிலையில் நான் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்து எழுப்புவதை நான் தவிர்ப்பது வழக்கம்.

தமிழ் தொலைகாட்சி சேனலில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பொய்யான கருத்தை கூறும் வீடியோ காட்சிகள் என்ன சொல்கிறது என்றால், நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டசபை இடைத்தேர்தலிலும் திமுகவோ அல்லது ஸ்டாலினோ வெற்றி பெறவில்லை. ஓஎம்ஜி என்ற நிறுவனமே வெற்றிக்கு வழி வகுத்ததாம்.

நேர்மையற்றத்தன்மை

நேர்மையற்றத்தன்மை

அந்த நிறுவனத்தில் 250 பேர் பணியாற்றுவதாகவும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் சொல்படி ஸ்டாலினின் முடிவுகளும் செயல்பாடுகளும் இருந்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள் பாண்டியராஜனின் மறைமுக செயல்திட்டம் குறித்தும் நேர்மையற்றத்தன்மை குறித்தும் வெளிப்படுத்துகிறது.

பணியாற்றுகின்றனரா

பணியாற்றுகின்றனரா

இது போன்று ஒரு நிறுவனம் செயல்படுகிறதா இல்லையா என்பதை சாதாரண மக்களால் அறிய முடியாது. ஆனால் மனிதவள மேம்பாட்டுத் துறையில் நிபுணத்துவம் உள்ளவரும், பல்வேறு நிறுவனங்களை நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு வாங்கியவரும் விற்றவரும், தமிழக அரசின் அமைச்சராக உள்ள மாஃபா பாண்டியராஜன் இதுபோன்ற நிறுவனம் உள்ளதா என சோதனை செய்திருக்கலாம். அங்கு இத்தனை பேர் பணியாற்றுகின்றனரா? போன்றவற்றை அவர் விசாரித்திருக்கலாம். முற்றிலும் பொய்யான தகவல்களை கூறியதன் மூலம் மாஃபா பாண்டியராஜனை வேண்டுமென்றே இது போன்ற பொய்களை கூறியுள்ளது தெரியவந்துள்ளது.

சாதாரணமானவர்கள்

சாதாரணமானவர்கள்

அவரது கட்சிக்கு வாக்களிக்காமல் மக்கள் புறக்கணித்ததை அவர் கூறுவது தெளிவாக புரிகிறது. மாஃபா பாண்டியராஜன் போன்ற நன்கு படித்தவர்கள் இதுபோல் பொய்ககளை சொல்ல வேண்டும்? தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளியின் மகனான தன்னை போன்ற சாதாரணவர்களையும் அமைச்சராக்கும் ஒரே கட்சி அதிமுகதான் என கூறியுள்ளார். அவர் அதிமுகவுக்கு வரும் போது ஏழையாக இல்லை. அவரும் அவரது மனைவியும் இணைந்து மனிதவள மேம்பாடு நிறுவனத்தை 100 கோடிக்ளுக்கு விற்றுள்ளனர்.

தாவியது

தாவியது

எங்கள் கட்சி தலைவர் ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதே உண்மையே தவிர மாஃபா சொல்வது போல் எந்த நிறுவனமும் காரணம் அல்ல. பொய் சொல்கிறோம் என தெரிந்தே மாஃபா தைரியமாக கூறியுள்ளார். அவர் அவ்வாறு ஏன் பொய் கூற வேண்டும்? அவரது அரசியல் வரலாற்றை பார்க்கும் போது அடுத்த கட்சிக்கு தாவ தயாராகிவிட்டார் என்றே தெரிகிறது. அவர் பல்வேறு கட்சிகளிலிருந்து தாவியது அனைவருக்கும் தெரிந்தது.

கட்சி தாவல்

பெரும் பணக்காரரான மாஃபா 2000-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பின்னர் 2011-ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தார். அங்கு அவர் அக்கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்தது 2013-ஆம் ஆண்டு தேமுதிகவின் அதிருப்தி எம்எல்ஏவாக செயல்பட்டார். பின்னர் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார். பின்னர் 2016-ஆம் ஆண்டு மீண்டும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ஜெயலலிதா மறைந்தபிறகு, அவர் தினகரன் கூடாரத்தை ஆதரித்தார்.

யார் இயக்குகிறார்கள்

யார் இயக்குகிறார்கள்

பின்னர் சிறிது நாட்களில் ஓபிஎஸ் அணிக்கு தாவினார். ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போன்று ஒரு மெழுகு சிலையை உருவாக்கி ஆர் கே நகருக்கு முதல் முறையாக அறிவிக்கப்பட்ட தேர்தலில் டிடிவி தினகரனுக்கு எதிராக பிரசாரம் செய்தார். அதன்பிறகு தற்போது ஈபிஎஸ்- ஓபிஎஸ் கூட்டணியில் இணைந்து அமைச்சராக உள்ளார். எனவே திமுக குறித்து பொய் மூட்டை அவிழ்த்துவிடுவது அடுத்த கட்சிக்கு தாவும் முயற்சியா இல்லை அடுத்த தாவும் கட்சி இவர் முதலில் இணைந்த அரசியல் கட்சியா. இவரை பின்னால் இருந்து இயக்குவது யார் என பிடிஆர் பழனிவேல்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
MLA PTR asks that whether Mafoi Pandiyarajan is ready for switching to another party? or he is movind next to his first political party?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more