சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான்தான் அமமுகவில் இல்லைன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் என்னை கூட்டத்திற்கு கூப்பிடல..எம்எல்ஏ வேதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ்- ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ

    சென்னை: தான் தற்போது அமமுகவில் இல்லை என்று கூறிய பிறகும் தனக்கு அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.

    அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த வாரம் மதுரை எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கொளுத்தி போட்ட பட்டாசு வெடிக்கத் தொடங்கியது.

    அதிமுகவை சேர்ந்த பலரும் கட்சிக்கு ஆளுமை மிக்க ஒற்றை தலைமை வேண்டும் என முழக்கமிட தொடங்கிவிட்டனர். போதாகுறைக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று ஆங்காங்கே போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.

     இந்தியாவின் மற்றொரு மணிமகுடம் 'சந்திராயன் 2'... புகைப்படத்துடன் இஸ்ரோ வெளியிட்ட ஆச்சர்ய தகவல்கள் இந்தியாவின் மற்றொரு மணிமகுடம் 'சந்திராயன் 2'... புகைப்படத்துடன் இஸ்ரோ வெளியிட்ட ஆச்சர்ய தகவல்கள்

    அமைச்சர்கள் ஆப்சென்ட்

    அமைச்சர்கள் ஆப்சென்ட்

    இதைத்தொடர்ந்து இன்று அவசர அவசரமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று நடத்தியது அதிமுக தலைமை. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஓஎஸ் மணியன் மற்றும் சிவி சண்முகம் ஆப்சென்ட்டாகியுள்ளனர்.

    மூன்று எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை

    மூன்று எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை

    அமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணித்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் அமமுகவுக்கு ஆதராவாக பேசிய மூன்று எம்எல்ஏக்கள், பிரபு, கலைச்செல்வன், மற்றும் ரத்தினசபாபதி ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    என்னை அழைக்கவில்லை

    என்னை அழைக்கவில்லை

    அமமுக ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேருக்கும் கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசிய எம்எல்ஏ ரத்தினசபாபதி, தான் தற்போது அமமுகவில் இல்லை என்று கூறிய பிறகும் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

    சந்தோஷமும் இல்லை

    சந்தோஷமும் இல்லை

    நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் வருத்தமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்றும் ரத்தினசபாபதி எம்எல்ஏ தெரிவித்தார். இதேபோல் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத எம்எல்ஏ கலைச்செல்வன் கட்சிக்கு ஒற்றைத்தலைமை இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

    பலம் பொருந்திய தலைமை

    பலம் பொருந்திய தலைமை

    ஒற்றைத்தலைமை இருந்தால் மட்டுமே அதிமுக பலம் பொருந்தியதாக இருக்கும் என்றும் தொண்டர்களும் வாக்காளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமை இப்போது அதிமுகவுக்கு தேவைப்படுகிறது என்றும் கலைச்செல்வன் எம்எல்ஏ கூறினார்.

    English summary
    MLA Rathinasabhapathi feeling bad for not invited for ADMK party executives meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X