சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கராத்தே தியாகராஜன் சொல்றதுக்கெல்லாம் கவலைப்படவில்லை.. ஆனால்.. விஜயதரணி எம்எல்ஏ விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: கராத்தே தியாகராஜன் தன் மீது என்ன குற்றச்சாட்டு முன் வைத்தாலும் அதுபற்றி கவலையில்லை என்றும் உண்மை என்னவென்று ஆய்வு செய்த பிறகு குற்றச்சாட்டை முன்வைக்கட்டும் என்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி விளக்கம் அளித்துள்ளார்.

என்னைப் போலவே நிறைய மாவட்ட செயலாளர்களும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

mla vijayadharani refused allegation of appreciate pm modi in tv debate

கன்னியமாக்குமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி டிவி விவாதத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதாக காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டியிருந்தார். காராத்தே தியாகராஜனின் விமர்சனம் குறித்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் வீட்டில் விஜயதரணி செய்தியாளர்கள் சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்பொழுது அவர் பேசுகையில், "கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியில் தற்காலிக நீக்கம் செய்துள்ள நிலையில் கட்சியினர் மீது பலேவேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதேபோல் நான் பிரதமர் மோடிக்கு ஆதாரவாக ஊடக விவாதங்களில் பேசியதாக என் மீதும் குற்றம் சாட்டுகிறார்.

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சண்முகம் பதவியேற்றார் தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சண்முகம் பதவியேற்றார்

ஆனால் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தொடர்ந்து 2 நாட்களாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தும், அறிவுரை வழங்கியும் வந்தார். நான் அதற்கு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் மீது விமர்சனம் செய்து மக்கள் பிரச்சனை கைவிடக்கூடாது என்றுதான் கூறினேன். அந்த விவாதங்களை முழுமையாக பார்த்துவிட்டு பின்னர் குற்றம்சாட்டட்டும். மேலும் நான் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு என்னுடைய விளக்கத்தை அளித்துள்ளேன்.

நான் அடிமட்ட தொண்டனாக காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளேன். எந்த விதத்திலும் நமது கட்சியை பலவீனப்படுத்தக்கூடிய எந்த ஒரு கருத்தையும் பேசிவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டுதான் ஊடக விவாதங்களில் பேசி வருகிறேன்.

கராத்தே தியாகராஜன் என்மீது என்ன குற்றச்சாட்டு முன் வைத்தாலும் நான் கவலைப்படவில்லை. உண்மை என்னவென்று ஆய்வு செய்த பிறகு குற்றச்சாட்டை முன்வைக்கட்டும்.

குற்றம்சட்டினால் மட்டும் எல்லாம் முடிந்துவிடும் என்று அவர் நினைத்தால் முழுமையாக உண்மையை தெரிந்து கொண்டு குற்றம்சாட்டடும்" இவ்வாறு கூறினார்.

English summary
mla vijayadharani refused karathe thyagarajan allegation of appreciate pm modi in tv debate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X