சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'வீரமங்கை பி.வி. சிந்து.. இந்தியப் பெண்களின் பெருமிதமாகத் திகழ்கிறார்..' கமல்ஹாசன் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: இரண்டு முறை பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள வீரமங்கை பி.வி. சிந்து, இந்தியப் பெண்களின் பெருமிதமாகத் திகழ்கிறார் என குறிப்பிட்டுள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

Recommended Video

    PV Sindhu Unknown Facts | Tokyo Olympics | Who Is PV Sindhu? | Oneindia Tamil

    இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி வி சிந்து இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிங்ஜியாவோவை 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

     MNM Chief Kamal congrats PV Sindhu for her bronze medal in Tokyo Olympics

    இதன் மூலம் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற மாபெரும் சாதனையை பி வி சிந்து படைத்துள்ளார். ஏற்கனவே சிந்து 2016 பிரேசில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

     MNM Chief Kamal congrats PV Sindhu for her bronze medal in Tokyo Olympics

    ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை பதக்கம் வென்றுள்ள சிந்துவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் என பலரும் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

     MNM Chief Kamal congrats PV Sindhu for her bronze medal in Tokyo Olympics

    இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலும் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். கமல் தனது ட்வீட்டில், "ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதே ஒரு சாதனை. பதக்கம் வெல்வது பெரும் சாதனை. இரண்டு முறை பதக்கம் வெல்வது வரலாற்றுச் சாதனை. புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து இந்தியப் பெண்களின் பெருமிதமாகத் திகழ்கிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

    அதேபோல திமுகவின் டாக்டர் ஆர் மகேந்திரன் தனது ட்விட்டரில், "ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை மற்றும் இரண்டாவது இந்திய நபர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ள சிந்துவுக்கு எனது வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Sindhu won consecutive bronze medals in Olympics. MNM chief Kamal Haasan congrats PV Sindhu for her medals in Olympics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X