சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் சதி.. அப்பவே அவர் தட்டி கேட்டு இருக்கணும்.. சைலன்ட் ஆன கமல்.. மநீமவில் என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில் அதன் தலைவர் கமல்ஹாசன் விரைவில் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

Recommended Video

    பச்ச துரோகம் என MNM கட்சியிலிருந்து வெளியேறியவர்களை திட்டிய Sanam Shetty

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பெரிய பிளவை சந்தித்துள்ளது. கட்சியின் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகிறார்கள்.

    பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வார வாராம் எவிக்ட் ஆவது போல அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். கமலின் தலைமையை விமர்சனம் செய்து இவர்கள் கட்சியில் இருந்து விலகி வருவது மநீம தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    மகேந்திரன் ஒரு 'துரோகி'.. தோல்வியின்போது ஓடும் கோழைகளைப் பற்றி பொருட்படுத்தியதில்லை.. கமல் காட்டம்மகேந்திரன் ஒரு 'துரோகி'.. தோல்வியின்போது ஓடும் கோழைகளைப் பற்றி பொருட்படுத்தியதில்லை.. கமல் காட்டம்

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    இதுவரை மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், பொன்ராஜ், மற்ற சி.கே.குமரவேல், மௌரியா,பொறுப்பாளர்கள், சந்தோஷ்பாபு, முருகானந்தம் ஆகியோர் வெளியேறி உள்ளனர். கடைசியாக ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, பத்ம ப்ரியா ஆகியோரும் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இன்னும் சிலர் வெளியேற காத்து இருக்கிறார்கள்.

    கமல் சைலன்ட்

    கமல் சைலன்ட்

    இந்த நிலையில் முதலில் நிர்வாகிகள் சிலர் வெளியேறிய போது கமல்ஹாசன் அதை குறித்து விமர்சனம் செய்தார்.துரோகிகள்.. இவர்களை களையெடுக்க வேண்டும் என்று முன்பே யோசித்து இருந்தேன். இப்போது அவர்களே வெளியேறிவிட்டனர் என்று கமல்ஹாசன் விமர்சனம் வைத்து இருந்தார். என்னை நம்பும் தொண்டர்களுக்கு நன்றி என்றும் கூட கமல் குறிப்பிட்டு இருந்தார்.

    அமைதி

    அமைதி

    ஆனால் தற்போது அதன்பின்பும் பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில் கமல்ஹாசன் மொத்தமாக அமைதியாகி இருக்கிறார். கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறியது குறித்து எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கிறார். கட்சியில் மீதம் உள்ள நிர்வாகிகளுடன் கூட கமல்ஹாசன் எதுவும் பேசியதாக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

    துரோகிகள்

    துரோகிகள்

    தேர்தல் நேரத்தில் சில முக்கிய நிர்வாகிகள் கட்சிக்கு உள்ளேயே கமலுக்கு எதிராக எதிராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அதிலும் கொங்கில் சில நிர்வாகிகள் கட்சிக்கு எதிராக சதி செய்ததாகவும், அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் ஆதரவாக சில தேர்தல் பணிகளை செய்ததாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் கமல்ஹாசன் கோபமாக தொடக்கத்தில் இரண்டு அறிக்கைவிட காரணம் என்கிறார்கள்.

     இல்லை

    இல்லை

    ஏன் கமலின் கோவை தெற்கு தொகுதியில் கூட இப்படி சிலர் அவருக்கு எதிராக வேலை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அப்போதே இதை கமல் தட்டிக்கேட்கவில்லை. தேர்தல் முடிந்ததும் பார்க்கலாம் என்று விட்டுவிட்டார். இப்போது கட்சிக்கே அது சிக்கலாக மாறியுள்ளது என்று நிர்வாகிகள் சிலர் புலம்புகிறார்கள். கமல் விரைவில் இது தொடர்பாக மீட்டிங் நடத்துவார் என்றும் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

    அதிருப்தி

    அதிருப்தி

    பல நெருக்கமான தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இதனால் கமல்ஹாசன் அதிருப்தியில் இருக்கிறார். அதனால்தான் தற்போது அமைதியாக உள்ளார். ஆனால் சீக்கிரம் அவர் வெளியே வந்து மீட்டிங் போடுவார், கட்சியில் மீதம் உள்ள தலைவர்களுடன் பேசுவார். எங்கே சறுக்கியதோ அதை கண்டிப்பாக சரி செய்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    MNM chief Kamal Haasan will hold a meeting soon to revamp the party as many prominent leaders left the party after the election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X