சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மய்யம் 1.. வியாபாரத்தை புறம் தள்ளி.. கொள்கை ரீதியாக விஸ்வரூபம் எடுக்கும் கமல் #MakkalNeedhiMaiam

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து இந்த ஓராண்டு சாதனைகள், வளர்ச்சிகள்தான் என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    கொள்கை ரீதியாக விஸ்வரூபம் எடுக்கும் கமல்- வீடியோ

    சென்னை: கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த வருடத்தில் கமல் செய்ததுதான் என்ன?

    ஆரம்பத்தில் கமல் அரசியலில் நுழைந்தவுடன் இப்படி ஒரு வளர்ச்சியை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. சினிமா வாய்ப்புகள் குறைவதாலும், இருக்கும் பாப்புலாரிட்டியை தக்க வைத்து கொள்வதற்காகவும்தான் அரசியலுக்குள் வருகிறார் என்ற பேச்சுதான் பரவலானது.

    இன்னும் சில தலைவர்கள், இதுவரைக்கும் சம்பாதித்தது பத்தாமல், இனி அரசியலிலும் சம்பாதிக்க வந்துவிட்டார் என்று பகிரங்கமாகவே விமர்சித்தார்கள்

    அவசியம்

    அவசியம்

    ஆனால் இந்த ஒரு வருடத்தில் இந்த பேச்சு எதுவுமே திரும்பவும் எழுப்பப்படவில்லையே ஏன்? மீண்டும் விமர்சிக்கப்படவில்லையே ஏன்? ஏனென்றால் களப்பணி என்பது எந்த ஒரு கட்சிக்கும் அவசியம். அது இன்றைக்கு மய்யத்திற்கு நிறையவே இருக்கிறது.

    ஸ்தாபன வளர்ச்சி

    ஸ்தாபன வளர்ச்சி

    தேர்தலின் வெற்றி தோல்வியை வைத்து அரசியல் கட்சியை கட்சியை முதலாவது, இரண்டாவது என்ற வரிசையில் தகுதிப்படுத்துவது ஒரு ரகம். கட்சியின் கொள்கை, கோட்பாடு, அரசியல் செல்வாக்கு, என விரிவடைந்து ஸ்தாபன ரீதியான வளர்ச்சி என்பது இரண்டாவது ரகம். இதில் முதல் ரகம் என்பது மாறுபடக்கூடியது. தேர்தலுக்கு தேர்தல் வித்தியாசப்படக்கூடியது. இதை வைத்து எந்த கட்சியையும் வரிசையில் கொண்டுவர முடியாது.

    உளவுத்துறை ரிப்போர்ட்

    உளவுத்துறை ரிப்போர்ட்

    ஆனால் இரண்டாவது ரகம் என்பது நிலைக்கக்கூடியது. அதற்கு உதாரணம்தான் அதிமுக, திமுக! இந்த இரு கட்சிகளும் அடுத்தடுத்து முன்னுக்கு பின் நிற்குமே தவிர வேறு எந்த கட்சிகளையும் உள்ளே நுழைய விட்டதில்லை. ஆனால் 3-வது இடம் என்பது மிக முக்கியமானது. இந்த இடத்தைதான் இப்போது கட்சியை ஆரம்பித்த கமல் பிடித்துள்ளதாக உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று தெரிவிக்கிறது.

    3-வது இடம்

    3-வது இடம்

    காங்கிரஸ், பாஜக என்ற தேசிய கட்சிகள் இருந்தாலும், மாநில அளவில் அவை பின்னுக்குதான் இன்றும் உள்ளன. பாமக, தேமுதிக கட்சிகள் 3-வது இடத்துக்கு சென்று வந்த கட்சிகள்தான் என்பதை காலம் நமக்கு சொல்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டிதான் கமல் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இத்தனைக்கும் ஒரு இடைத்தேர்தலை கூட சந்தித்தது கிடையாது. இதுதான் கமலின் முதல் வெற்றி.

    திமுக கலக்கம்

    திமுக கலக்கம்

    இதையடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கமலின் வருகையால் ஆட்டம் கண்டுள்ளது கண்டிப்பாக திமுகதான் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் ஆளும் தரப்பை கடுமையாக விமர்சித்த கமல்தான், இன்று திமுக பக்கம் பார்வையை திருப்பி உள்ளார். இதற்கு காரணம் அதிமுக சாதகமான கட்சியாக மாறிவிட்டது என்பதால் அல்ல! தவறுகள் எங்கே இருந்தாலும் சுட்டிக்காட்ட தயங்காதவர் என்பதற்காகத்தான். உண்மையிலேயே கமலின் அரசியல் வருகை திமுகவுக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் இப்போதைய தாக்கமாக உள்ளது.

    உடும்பு பிடி

    உடும்பு பிடி

    அடுத்ததாக, கொள்கை பிடிப்பு என்பது இன்றைக்கும் உடும்பு பிடியாக இருக்கிறது. ஒரு காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா முன்னால் உட்கார்ந்தவர்தான் இன்று சீட்டு தருவார்களா என்று காத்திருக்கிறார். அன்று தந்தையின் செல்வாக்குடன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கூட ஏதாவது ஒன்று, இரண்டு சீட் தந்து விட மாட்டார்களா என்று காத்து கொண்டிருக்கிறார்.

    விஸ்வரூபம்

    விஸ்வரூபம்

    இதுபோன்ற நிலையை, அடுத்தவர்களிடம் பேரம் பேசும் ஒரு வியாபாரத்தை கமல் கையில் எடுக்கவில்லை. இது அவரது மதிப்பை ஒருபக்கம் உயர்த்தி காட்டினாலும், எந்த ஒரு கட்சியும் ஒரே வருடத்தில் செய்ய துணியாத காரியம் இது. இது எல்லாவற்றிற்கும் மேலாக வரும் தேர்தலில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க கூடிய இடத்தில் கமல் இன்று இருப்பதும், அதை குறுகிய ஒரு வருடத்தில் செய்து காட்டியதும் வரவேற்கத்தக்கதே.. மெச்சத்தக்கதே.

    English summary
    Kamalhasan's Party Makkal Neethi Maiam celebrates anniversery today. He has a lot of achievements in this one year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X