சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமல்ஹாசனின் மநீமவுக்கு புதுவையில் பேட்டரி டார்ச் சின்னம் -தமிழகத்தில் சின்னம் ஒதுக்கப்படவில்லை!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மநீமவுக்கு தமிழகத்தில் எந்த சின்னமும் ஒதுக்கப்படவில்லை.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் 6 மாதங்களே உள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

MNM gets Battery Torch Symbol in Puducherry

இதனடிப்படையில் தமிழகம், புதுவையில் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட விவசாயி சின்னமே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கொடுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவையில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம், அமமுகவுக்கு பிரஷர் குக்கர் சின்னம்தமிழகம், புதுவையில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம், அமமுகவுக்கு பிரஷர் குக்கர் சின்னம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுவையில் மட்டும் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எந்த ஒரு சின்னமும் ஒதுக்கப்படவில்லை.

தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kamal Haasan's MNM got Battery Torch Symbol in Puducherry only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X