சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வள்ளுவருக்கு வண்ணம் பூச தேவையில்லை.. அவருக்கு மதம் கிடையாது.. கமல்ஹாசன் அதிரடி!

திருவள்ளுவருக்கு வண்ணம் பூச தேவையில்லை, அவருக்கு மதம் கிடையாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திருவள்ளுவருக்கு வண்ணம் பூச தேவையில்லை, அவருக்கு மதம் கிடையாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாஜக டிவிட் செய்தது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. வள்ளுவரை பாஜக அவமானப்படுத்திவிட்டது என்று பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

MNM Kamal Haasan responses over the Thiruvalluvar Controversy

பாஜக கட்சி தனது டிவிட்டில்,

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?, என்று பாஜக டிவிட் செய்து இருந்தது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், திருவள்ளுவர் எந்த மதத்திற்கும் சொந்தமல்ல. திருவள்ளுவரை எல்லா மதத்தினரும் தனதாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அது தவறு.

முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் இணைந்தார் பிரபல டிவி நடிகைமுன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் இணைந்தார் பிரபல டிவி நடிகை

அவர் ஒரு பொதுக்கருத்து என்பது தான் உண்மை. அவர் அனைவருக்கும் பொதுவாக இருக்கிறார். யாருக்கும் அவர் சொந்தமில்லை.

அவருக்கு வண்ணம் பூச தேவையில்லை. அப்படி பூசினால் அது தவறு. நடிப்பு என் தொழில், அரசியல் என் கடமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

English summary
MNM Kamal Haasan responses over the Thiruvalluvar Controversy, Says that Valluvar doesn't have a religion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X