• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அவர்" அவ்ளோ பிரச்சனை கிளப்பினாரே.. இப்ப பார்த்தீங்களா.. அதான் கமல்.. திரும்பி பார்க்க வைத்த கோவை

Google Oneindia Tamil News

சென்னை: நீண்ட நாட்களுக்கு பிறகு பிஸியாகி விட்டார் கமல்.. அந்த வகையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அடுத்தடுத்த பணிகளிலும் இறங்கி உள்ளதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கி உள்ளன.

கிராம சபை என்பது நம் நாட்டில் அந்த காலத்தில் இருந்தே இருக்கிறது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த எந்த அரசுகளும் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவுமில்லை..

இந்த உள்ளாட்சி அமைப்புகளை யாருமே கையில் எடுக்கவுமில்லை, சரியாக பயன்படுத்தி கொள்ளவுமில்லை என்பதே உண்மை.

மீண்டும் கமல்.. அதே கோவையில்..! அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் மநீம? புதிய மாஸ்டர் பிளான் தயார்மீண்டும் கமல்.. அதே கோவையில்..! அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் மநீம? புதிய மாஸ்டர் பிளான் தயார்

கமல்

கமல்

இதைத்தான் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எடுத்தார்.. இப்படிப்பட்ட நவீன விஞ்ஞான யுகத்தில், கிராமங்களை நோக்கி நகரங்கள் ஒரு நாள் வரப்போகிறது என்ற புது விஷயத்தை கமல் சொன்னார்.. அப்போது கமல் சொன்னபோது யாருமே அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. ஆனால், மாதிரி கிராம சபை கூட்டங்களுக்கும் கமலே நேரடியாக சென்று விழிப்புணர்வு ஊட்டினார்.

மநீம

மநீம

நம்மால் எளிதாக அமல்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தை இன்னொருவர் வந்துதான் செய்து முடிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும் என்று அன்று கமல் எதார்த்தமாக ஒரு கேள்வியையும் எழுப்பினார்.. அப்போதுதான் கிராம சபை என்ற என்ற பெயரே இளைய சமுதாயத்துக்கு தெரியவந்தது.. அதன் அவசியமும் புரிய வந்தது..

 கிராம சபை

கிராம சபை

ஆனால், அதற்கு பிறகு, சில முக்கிய தமிழக தலைவர்களே கமலின் பாணியான இந்த கிராம சபையை கையில் எடுத்ததையும், அதனால் நேரடியாக மக்களை சந்தித்து நெருங்கி பழகி அவர்களின் ஆதரவையும் பெற முடிந்ததையும் மறுக்க முடியாது.

அதிமுக

அதிமுக

6 மாதங்களுக்கு முன்பு ஸ்டாலின் இதைதான் செய்ய ஆரம்பித்தார்.. செல்லுமிடமில்லாம் கூட்டம் முண்டியடித்து கொண்டு வந்தது.. அடுத்தடுத்த நாட்களிலேயே இத்தகைய கிராம சபை கூட்டங்களை நடத்துவதற்கு முந்திய அரசு தடை போட்டுவிட்டது.. இப்போது, இதே விஷயத்தை கமல் ஆரம்பித்துள்ளார்.. கோவை கலெக்டர் ஆபீசுக்கு கமல் வந்திருந்தார்.. கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கலெக்டரிடம் மனுவும் தந்தார்.

மனு

மனு

இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல வேண்டி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, எஸ்பி வேலுமணி மனு கொடுக்க சென்ற போது கலெக்டர் எழுந்து நின்று மனு வாங்கவில்லை, சேரில் உட்கார்ந்து கொண்டே மனு வாங்கினார் என்று விவகாரம் சர்ச்சையான நிலையில், கமலிடம் எழுந்து நின்று மனு வாங்கி இருக்கிறார் அதே கலெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

 கிராம சபை

கிராம சபை

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கலெக்டரிடம் தந்திருக்கிறேன்.. 2020 ஜனவரி மாதத்திற்கு மேல் கிராமசபை நடக்கவே இல்லை என்பதுதான் எங்களது குறை.. அதனால்தான் அதனை மனுவாக அளித்துள்ளேன்.. பட்ஜெட்டில் கிராமசபைக்கு என தனி ஒதுக்கீடு குறித்து அறிவிக்க வேண்டும்.

நன்றி

நன்றி

அடுத்த கிராமசபை விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.. கூட்டம் கூடுவதை அரசு விரும்பவில்லை என்பதனால் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.. இன்னைக்கு சில இரங்கல் வீடுகளுக்கு செல்ல வேண்டி இருக்கிறது, அதனால் நாளை செய்தியாளர்களை மறுபடியும் சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார்.

 கமல் ரெடி

கமல் ரெடி

அதேசமயம், இந்த மனுவை கமலை அளித்துள்ளதை பார்த்தால், உள்ளாட்சி தேர்தலுக்கு ரெடி என்பது போலதான் தெரிகிறது.. என்னதான் கமல் கிராம சபை கூட்டத்தை நடத்தி வந்தாலும், தேர்தல் என்று வரும்போது, கிராமங்களுக்கு முக்கியத்துவம் தந்து பிரச்சாரங்களையும், வேட்பாளர்களையும் நிறுத்துவதில்லை என்று ஒரு குறை உள்ளது..

 உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்

குறிப்பாக, கமல் மேல்மட்ட அளவிலேயே அரசியல் செய்து வருவதாகவும், கமல் நினைத்திருந்தால், ஏதாவது ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து போட்டியிட்டிருந்தால், அது இன்னமும் அவருக்கு பலத்தை தந்திருக்கும், கிராம சபை முழுமையாக கை கொடுத்திருக்கும் என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. இனி அடுத்தடுத்த தேர்தல்களை தமிழகம் சந்திக்க தயாராகி வரும் நிலையில், கமல் எப்படியும் தன் கட்சி மீதான குறைகளையும் அதிருப்திகளையும் போக்குவார் என்று நம்பப்படுகிறது.. அதற்கு இந்த கிராம சபை கூட்டம் அடிநாதமாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.. பார்ப்போம்..!

English summary
MNM Leader Kamalhasan urges to conduct Gram Sabhas
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X