சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிப்ரவரி முதல் கமல்ஹாசன் மக்கள் சந்திப்பு... கிராமங்கள் வாரியாக பயண ரூட் ரெடி

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்குவது உறுதியாகிவிட்டதாம்.

காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை காரணமாக தற்போது சிகிச்சையிலும், ஓய்விலும் உள்ள கமலுக்கு வலியிலிருந்து ஓரளவுக்கு நிவாரணம் கிடைத்துவிட்டதாம்

பிஸியோதெரப்பி உள்ளிட்ட பயிற்சிகள் மூலம் ஊன்றுகோல் உதவியின்றி தாமாக நடக்கும் அளவுக்கு கலம்ஹாசனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாம்.

ஜூன் மாதம் சீனா செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி... ஏற்பாடுகள் தீவிரம்ஜூன் மாதம் சீனா செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி... ஏற்பாடுகள் தீவிரம்

பிரச்சாரம்

பிரச்சாரம்

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளதால், அரசியல் கட்சித் தலைவர்கள் இப்போதே பிரச்சாரம், மக்கள் சந்திப்பு என பயணங்களை தொடங்க உள்ளனர். அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் வரும் பிப்ரவரி மாதம் தனது பிரச்சார பயணத்தை தொடங்குகிறார்.

2 ஆண்டுகள்

2 ஆண்டுகள்

மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 21-ம் தேதியன்று பிரச்சாரத்தை தொடங்கும் கமல் முதற்கட்டமாக கிராமங்கள் வாரியாக பயணிக்க உள்ளார். கிராமமக்களை அதிகளவு சந்திக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளதால் அதற்கு தகுந்தபடி பயண ரூட் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

மாற்றம்

மாற்றம்

நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல் கமலுக்காக பிரத்யேக பிரச்சார வேன் தயார் நிலையில் உள்ளது. அதில் லேசான உள்வடிவமைப்பு மாற்றங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஷூட்டிங்

ஷூட்டிங்

கமல் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை இரண்டு கட்டங்களாக பிரித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி பிப்ரவரி முதல் மே மாதம் வரை முதற்கட்ட பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா. இதனிடையே இந்தியன் 2 ஷூட்டிங்கும் இடையில் இருப்பதால் அதிலும் அவர் கலந்துகொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.

English summary
mnm president Kamal Hasan start campaign from February
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X