சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அழைக்கிறார் கமல்.. மய்யம் வேட்பாளராக விருப்பமா.. மனு கொடுக்கலாம்

மக்கள் நீதி மய்ய கட்சியின் விருப்ப மனு தாக்கல் தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனு தாக்கல் தொடங்கி உள்ளது.

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக இல்லை என்றாலும் சரி, புதிய தமிழகத்தை உருவாக்க விரும்பும் யார் வேண்டுமென்றாலும், விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

MNM voluntary Applications form

அதன்படி, அக்கட்சியின் விருப்ப மனு தாக்கல் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அறிவிப்பு ஒன்றும் வெளியாகி உள்ளது.

என்னாது உதயநிதி ஸ்டாலினுக்கு எம்.பி சீட்டா.. பரபரக்கும் திமுக என்னாது உதயநிதி ஸ்டாலினுக்கு எம்.பி சீட்டா.. பரபரக்கும் திமுக

அதில், " 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனுவினை சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமையகங்களில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 7ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MNM voluntary Applications form

விருப்ப மனுவை ரூ.10,000 விண்ணப்பத் தொகை செலுத்தி பெற்றுக் கொள்வதுடன், விருப்ப மனுவினை சென்னை தலைமை அலுவலகத்தில் 6 மற்றும் 7 ஆகிய இரு தேதிகளில் காலை 11 மணி முதல் 1 மணி வரை கட்சி தலைவர் கமல்ஹாசன் முன்னிலையிலேயே அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நேரடியாக அளிக்க விரும்புவோர், விருப்ப மனு மற்றும் டிடியுடன் இணைத்து கட்சி தலைமையகத்திற்கு காலை 11 மணிக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் வரவேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

English summary
MNM Party announcement regarding Voluntary Applications form
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X