இப்படியெல்லாம் காப்பி அடிச்சா பெயில் ஆயிடுவீங்க - ஸ்டாலினை கிண்டலடிக்கும் ஸ்ரீபிரியா
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும், நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்கும் குடும்பத் தலைவியர் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியும் நடிகையுமான ஸ்ரீப்ரியா கிண்டலடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திமுக-வின் பொதுக் கூட்டம், திருச்சி சிறுகனூரில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்கும் குடும்பத் தலைவியர் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் என்று தெரிவித்தார்.
திமுகவின் இந்த அறிவிப்பினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்கள் தான் டயலாக் சொல்லி கொடுத்துள்ளது போல், தங்களது திட்டத்தை அறிவித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
இல்லதரசிக்கு ஊக்க தொகை வழங்குவோம் என்று மக்கள் நீதிமய்யம் அறிவித்ததை, திமுக ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவிப்பதாக விமர்சித்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் எழுதி வைக்கும் காகிதங்கள் பறந்து சென்று, துண்டு சீட்டாக மாறி வருவதாகவும் கிண்டலடித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியும் நடிகையுமான ஸ்ரீப்ரியாவும் திமுகவின் இந்த அறிவிப்பை கேலி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்...திமுக அறிவிப்பு... இப்படியெல்லாம் காப்பி அடிச்சா பெயில் (fail)ஆயிடுவீங்க பாத்து என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீபிரியா. ஸ்ரீபிரியாவின் பதிவுக்கு திமுகவினர் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.