சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு தாக்கரே குடும்பம் செம ஹேப்பி.. இன்னொரு குடும்பம் பெரும் சோகம்.. சறுக்கிய ராஜ் தாக்கரே!

ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியானது பின்னடைவை சந்தித்துள்ளது

Google Oneindia Tamil News

மும்பை: உண்மையிலேயே மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவுக்கு நேரம் சரியில்லைதான்.. உத்தவ் தாக்கரே குடும்பம் செம ஹேப்பியாக உள்ளநிலையில், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியானது மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளது.

ஒரு பக்கம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகன் மற்றும் கட்சியின் எழுச்சியால் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். சிவசேனா அங்கு கிங் மேக்கராக மாறியுள்ளது. ஆனால் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சி சோடை போகவில்லை.

கடைசி நேர நிலவரப்படி ஒரு தொகுதியில் கூட அக்கட்சி முன்னிலை பெறவில்லை. ராஜ் தாக்கரே கட்சி 110 இடங்களில் போட்டியிட்டது நினைவிருக்கலாம். ஆனால் மறுபக்கம் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சிவசேனா வெல்லும் நிலையில் உள்ளது.

ஆதித்யா தாக்கரேவை முதல்வராக பார்க்க ஆசை.. சிவசேனாவின் திடீர் கோரிக்கைஆதித்யா தாக்கரேவை முதல்வராக பார்க்க ஆசை.. சிவசேனாவின் திடீர் கோரிக்கை

உரசல்கள்

உரசல்கள்

பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே. தங்கை மகன் ராஜ் தாக்கரே. தாக்கரே இருந்தபோதே இருவருக்குள்ளும் உரசல்கள் இருந்தன. பால் தாக்கரேவுக்கு மகன் மீது அதிக பாசம்தான். ஆனாலும் ராஜ் தாக்கரே மீதும் அவர் அதிக அன்பு பாராட்டினார். பால்தாக்கரே மறைவுக்குப் பின்னர் இருவரும் இரு துருவமாக மாறினர்.

சிவசேனா

சிவசேனா

மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியை 2006ம் ஆண்டு ஆரம்பித்தார் ராஜ் தாக்கரே. ஆனால் அவரால் சிவசேனாவைத் தாண்டி எழுச்சி பெறமுடியாமல் போய் விட்டது. இந்தத் தேர்தலில் கூட அக்கட்சியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. மாறாக உத்தவ் தாக்கரே தனது கட்சியை மிக வலிமையான ஒரு சக்தியாக மாற்றிக் காட்டியுள்ளார். அதை விட முக்கியமாக தனது மகனையும் வெல்ல வைத்துள்ளார்.

ஆதித்யா தாக்கரே

ஆதித்யா தாக்கரே

பால் தாக்கரே குடும்பத்தில் இதுவரை யாருமே தேர்தலில் போட்டியிட்டதில்லை. உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேதான் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு அந்த சாதனையை படைத்தார். இப்போது அவரும் வெல்லப் போகிறார். ஆக, சிவசேனாவின் வளர்ச்சிப் பாதை இனி ஆதித்யா தாக்கரே தலைமையில் இருந்தாலும் கூட அது ஆச்சரியப்படுவதற்கில்லை.

பேச்சாளர்

பேச்சாளர்

மறுபக்கம் ராஜ் தாக்கரேவைப் பார்த்தால் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது. அப்படியே பால் தாக்கரேவைப் போன்ற உருவம். ஆனால் அரசியலில் ராஜ் தாக்கரே பெரிய சாதனையை செய்ய முடியாத நிலைக்கு போய் விட்டார். இத்தனைக்கும் ராஜ் தாக்கரே நல்ல பேச்சாளர். அவர் பேச ஆரம்பித்தால் கூட்டத்தில் பின்-டிராப் சைலன்ஸ் இருக்கும். அப்படி அழகாக பேசுவார். உத்தவிடம் அந்தத் திறமை கிடையாது.

தீவிர பிரச்சாரம்

தீவிர பிரச்சாரம்

ராஜ் தாக்கரேவுக்கு நல்ல கூட்டம் வரும். அவரது பேச்சைக் கேட்க வரும் அந்தக் கூட்டம் ஓட்டுக்களாக மாறாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. கடந்த 20009 சட்டசபைத் தேர்தலில் ராஜ் தாக்கரே கட்சி 13 இடங்களில் வென்றது. 2014ல் ஒரே ஒரு இடம்தான் கிடைத்தது. 2019 லோக்சபா தேர்தலில்இக்கட்சி போட்டியிடவில்லை. மாறாக பாஜகவுக்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தில் குதித்தார் ராஜ் தாக்கரே.

பெரிய சரிவு

பெரிய சரிவு

ராஜ் தாக்கரேவின் பிரச்சாரத்தையும் தாண்டி பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 42 தொகுதிகளை பாஜக கூட்டணி வென்றது. இப்படி பாஜக கூட்டணிக்கு சாதகமான சூழல் இருந்த நிலையில் அதற்கு எதிராக போய்க் கொண்டிருந்த ராஜ் தாக்கரே, இன்று சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளார். அவரது கட்சியின் எதிர்காலமும் இதன் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது.

English summary
maharashtra and haryana election 2019: mns failed to win in single seat as SS snatches the big victory other side
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X