சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனி ரேஷன் கடை நம்மை தேடி வரும்.. நகரும் ரேஷன் கடைகளை திறந்தார் முதல்வர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 3501 நகரும் ரேஷன் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

கடந்த சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத் தொடரின் போது பேரவை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் முதல்வர். அப்போது அம்மா நகரும் நியாய விலை கடைகள் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

Mobile ration shops will be opened today in Tamilnadu

அதன்படி ரூ 9.66 கோடி மதிப்பீட்டில் 3501 நியாயவிலைக் கடை திட்டம் தொடங்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், மாவட்டத்தில் 168 கடைகளும் தமிழகம் முழுவதும் நகரும் நியாய விலை கடைகள் தொடங்கப்பட்டன.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப் பகுதிகளில் வசிப்போருக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த கடைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

English summary
3501 Mobile ration shops will be opened today by CM Edappadi Palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X