சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேடிஎம், போன் பே, அமேசான் பே மாதிரி வாலட் ஏதாவது பயன்படுத்துறீங்களா? உங்களுக்கு ஒரு குட்நியூஸ்

Google Oneindia Tamil News

சென்னை: நீங்க பேடிஎம், போன்பே, அமேசான் பே மாதிரி வாலட் பயன்படுத்தும் வாடிக்கையாளரா? அப்போ ஆர்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல சேதி வைத்துள்ளது.

இந்த காலத்தில் யார்தான் வாலட் இல்லாமல் இருக்கிறார்கள், ஆளுக்கொன்று வைத்திருக்கிறோம் என்று சொல்கிறீர்களா? வாலட் வைத்திருந்தால் மட்டும் போதாது, KYC எனப்படும், உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள் என்று ஒரு நடைமுறையை ஆர்பிஐ கட்டாயப்படுத்தியிருந்தது உங்களுக்கே தெரியும்.

Mobile wallets including Paytm have time February 2020 to Update KYC

ரிசர்வ் வங்கியின் இந்த கெடுபிடிகளால், சுய விவரம் அளிக்காத வாடிக்கையாளரின் கணக்கு செயலிழக்கும் நிலை ஏற்பட்டது. ஏற்கனவே வருமான வரி தாக்கல் அது இதுன்னு ஏகப்பட்ட வேலை.. இதில், கேஒய்சி வேற நிரப்பனுமா என்ற அங்கலாய்ப்பில் பலரும் அதை மறந்திருப்பார்கள்.

யாரை குறி வைத்து இந்த ரெய்டு.. சித்தனாதன் குழுமத்தால் சிக்கலில் திமுக.. சோதனை மேல் சோதனை!யாரை குறி வைத்து இந்த ரெய்டு.. சித்தனாதன் குழுமத்தால் சிக்கலில் திமுக.. சோதனை மேல் சோதனை!

அப்படியான வாடிக்கையாளர்களுக்குதான் நல்ல சேதி சொல்லியுள்ளது ரிசர்வ் வங்கி. ஆமாம்.. ஆகஸ்ட் 31ம் தேதியுடன் கேஒய்சி நிரப்பும் அவகாசம் முடிவடைந்ததாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், அதனை, அதிகரித்து, அடுத்த ஆண்டு, அதாவது 2020, பிப்ரவரி 29ம் தேதிவரை, கால நீட்டிப்பு செய்துள்ளது, ரிசர்வ் வங்கி.

சுமார் 6 மாத காலம் உங்களுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது. அதனால் டென்ஷனை விடுங்க, உங்களுக்கு தோதுப்படும் நேரத்தில் இந்த விவரங்களை நிரப்பிக்கொள்ளுங்கள். உங்கள் அக்கவுண்ட்டில் தொடருங்கள்.

English summary
Reserve Bank of India (RBI) extending the deadline for mobile wallets to become fully Know Your Customer (KYC) compliant, people using PhonePe, Paytm, Amazon Pay till February 29, 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X