அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீங்க எந்த ஊரு!
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பனிக்காலம் அதிகமாக இருந்த நிலையில் அதற்கேற்ப கோடைக் காலத்தில் வெயிலும் சுட்டெரிக்கும் என சொல்லப்பட்டது. அது போல் கோடை காலம் தொடங்கிய போதிலிருந்தே வெயில் பல நகரங்களில் சதமடித்தது.
பாஜக மத்திய சென்னை எஸ்சி பிரிவு தலைவர் பாலச்சந்தர் படுகொலை! 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
இதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த கத்தரி முடிய இன்னும் 3 நாட்கள் உள்ளன. எனினும் கோடை காலத்திலும் மழை பெய்து தமிழகத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

அசானி புயல்
இதற்கு காரணம் அசானி புயல். இந்த அசானி புயலால் வட இந்தியாவில் மழை பெய்தது. இதனால் அக்னி வெயிலே குளிர்ந்து போய்விட்டது. இந்த மழை 4, 5 நாட்கள் பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கீழடுக்கு வளி மண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுவை ஆகியவற்றில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

சென்னை புறநகர்
அந்த வகையில் இன்று காலையில் சென்னையில் மண்டையை பிளக்கும் வெயில் அடித்தது. திடீரென நண்பகலுக்கு மேல் நல்ல காற்று வீசியது. இதையடுத்து சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பூந்தமல்லி, திருநின்றவூர், திருமுல்லைவாயில், மாங்காடு, திருவேற்காடு, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

23 மாவட்டங்களில் மழை
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, கோவை, விருதுநகர், நாமக்கல், திருப்பூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தருமபுரி, பெரம்பலூர், நீலகிரி, நெல்லை, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அலுவலக நேரம்
மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் குறிப்பிட்டது அலுவலகம் முடியும் நேரம் என்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. நாளையும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.