சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தை மாதத்தில் நடுங்கும் குளிரோடு லேசான மழை.. 7 மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு ரெயின் கோட் அவசியம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Moderate rain next 3 hours Rain coat is essential for residents of 7 districts

வளிமண்டலத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றைய தினம் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்பு உள்ளது.

22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரைக்கும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 தை அமாவாசை.. சென்னை முதல் குமரி வரை புனித நீர் நிலைகளில் குவிந்த மக்கள்..முன்னோர்களுக்கு தர்ப்பணம் தை அமாவாசை.. சென்னை முதல் குமரி வரை புனித நீர் நிலைகளில் குவிந்த மக்கள்..முன்னோர்களுக்கு தர்ப்பணம்

வறண்ட வானிலை வாட்டி வதைக்கப்போகிறது என்று எதிர்பார்த்த நேரத்தில் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி இறுதி வரைக்குமே பருவமழை பெய்தது. இந்த ஆண்டு டிசம்பர் மாத துவக்கத்திலேயே மழை குறைந்து விட்டது. மீண்டும் மழை பெய்யப்போவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English summary
The Meteorological Department has announced that there is a possibility of rain in 7 districts in Tamil Nadu for the next three hours. According to the Meteorological Department, there is a possibility of light rain till 10 am in Chennai, Thiruvallur, Chengalpattu, Kanchipuram, Ranipet, Villupuram and Thiruvannamalai districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X