சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் பல இடங்களில் திடீர் மழை.. வடசென்னையில் கொரோனாவுக்கு இடையே விளையாடும் மழை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பல இடங்களில் திடீரென மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். வடசென்னையில் திருவொற்றியில் மழை பெய்து வரும் நிலையில் கொரோனா அச்சத்தால் கொண்டாட முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில், அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

Moderate rain lashes in Chennai

சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும் மற்றும் நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. என்ன நடந்தது?.. காவல் நிலையத்தில் நீதிபதிகள் அதிரடி விசாரணை!சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. என்ன நடந்தது?.. காவல் நிலையத்தில் நீதிபதிகள் அதிரடி விசாரணை!

வடசென்னையில் திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், குரோம்பேட்டை, ஹஸ்தினாபுரம், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் சென்னையில் பரவலாக ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

வடசென்னையில் கொரோனாவுக்கு மத்தியில் மழை பெய்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர். அது போல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சேவூர் உள்ளிட்ட இடங்களிலும் லேசான தூரல் இருக்கிறது.

English summary
Most of the places in Chennai and its suburbs get moderate rainfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X