சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. வந்துருச்சுய்யா.. சென்னையை முத்தமிட்ட முதல் மழை.. மண்மணத்தில் மயங்கிய மக்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Chennai Rain: சென்னையை முத்தமிட்ட முதல் மழை- வீடியோ

    சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளான பழைய மாமல்லபுரம் சாலை, வண்டலூர், படூர்,சிறுசேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

    கத்திரி வெயில் முடிந்த பிறகும், வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. தென் மேற்கு பருவமழை எதிரொலியாக, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட கேரளா எல்லையோரப் பகுதிகளில் அவ்வப்போது, காற்றுடன் சாரல் மழை பெய்கிறது.

    Moderate rains in Chennai suburbs Area

    சென்னை தற்போது, கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. 4 ஏரிகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துட்டது. தலைநகர் சென்னையை போல், மற்ற மாவட்ட மக்களும் தண்ணீருக்காக அலைய கூடிய சூழ்நிலை நிலவுவதால், மழையை நம்பியே மக்கள் இருக்கின்றனர்.

    இதற்கிடையில், சென்னையில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் ஆறுதலான வார்த்தையை வெகு நாட்களுக்கு பிறகு கூறியது. அதன்படி, தமிழகத்தில் ஜூன் 17- ம் தேதிக்கு பிறகு படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும்.

    தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூரில் கடந்த சில தினங்களாக அனல் காற்று வீசியது. சென்னையை பொறுத்தவரை, வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டது. இந்தநிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளான பழைய மாமல்லபுரம் சாலை, வண்டலூர், படூர்,சிறுசேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

    இதனால், வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது. மண் வாசம் வீசி வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையில், அடுத்த 5 நாட்களுக்கு சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு குறைந்து காணப்படும் என்றும் அவர் கூறினார்.

    English summary
    Moderate rains in Chennai suburbs Area, Peoples Are happy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X