சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவின் வெற்றிக்கு நான் காரணமல்ல.. டாடியும்.. மோடியும்தான் காரணம்.. உதயநிதி கலக்கல் பேச்சு!

கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுகவின் வெற்றிக்கு டாடியும், மோடியும்தான் காரணம் என்று திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுகவின் வெற்றிக்கு டாடியும், மோடியும்தான் காரணம் என்று திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2021 சட்டசபை தேர்தலுக்காக திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் இன்று திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக சார்பில், சென்னை ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு பொதுக்கூட்டம் நடத்தைப்பெற்றது. இந்த பிரம்மாண்ட வீரவணக்க பொதுக்கூட்டத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர்.

Modi and MY daddy are the reason for DMK victory in Lok Sabha elections says Udhayanidhi

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில், தமிழை ஒடுக்குவதற்கு அரசு முயன்று வருகிறது. இந்திக்கு கொடி தூங்குவதில் முதல்வர் பழனிசாமி அரசு தீவிரமாக செயல்படுகிறது. வள்ளுவருக்கு காவி வண்ணம் பூசிவர்களுடன், அதிமுக கூட்டணி வைத்துள்ளது. வள்ளுவரை அவர்கள் அசிங்கப்படுத்திவிட்டனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுக்க நான் பிரச்சாரம் செய்தேன். அப்போது திமுக தமிழகம் முழுக்க மாபெரும் வெற்றியை பெற்றது. 100% வெற்றியை திமுக அந்த தேர்தலில் பெற்றது. என்னுடைய பிரச்சாரம் தேர்தலில் பெரிய அளவில் உதவியது. அது என்னுடைய வெற்றி கிடையாது. அந்த வெற்றிக்கு நான் காரணம் கிடையாது .

அதற்கு இரண்டு பேர்தான் காரணம். ஒருவர் என்னுடைய டாடி. திமுக தலைவர் ஸ்டாலினின் விடா முயற்சிதான் இந்த வெற்றிக்கு காரணம். அவர் கடினமாக தேர்தலுக்காக உழைத்தார். அதனால் அவருக்கு வெற்றியும் கிடைத்தது.

அதேபோல் இன்னொருவர் மோடி. அவரும் திமுகவின் வெற்றிக்கு உழைத்தார். மக்களுக்கு எதிராக கடுமையான திட்டங்களை, சட்டங்களை அவர் கொண்டு வந்தார். அதன் பலனாக அவர் தேர்தலில் தமிழகத்தில் தோல்வியும் அடைந்தார்.

English summary
Modi and MY daddy are the reason for DMK victory in Lok Sabha elections says, Udhayanidhi Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X