சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாதனையை சொல்லுங்கள்... சாதியை சொல்லி வாக்கு கேட்பதா மோடி அவர்களே... திருமாவளவன் பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: சாதனையை சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் உள்ள நரேந்திர மோடி, சாதியை சொல்லி வாக்கு கேட்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொன்பரப்பியில் தலித் மக்கள் வாக்களிப்பதை தடுத்து வன்கொடுமை செய்தவர்களை கைது செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Modi asking votes on the caste says Thirumavalavan

இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பொன்பரப்பி நிகழ்வு தலித் மக்களுக்கு எதிரானது அல்ல; அது ஜனநாயகத்திற்கு விடுக்க கூடிய சவால் என்று தெரிவித்தார். மேலும், சாதியின் பெயரால் தமிழகத்தை வன்முறை காடாக்க பாமக முயற்சி செய்வதாக பேசிய திருமாவளவன், பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருப்பதாக கூறினார்.

வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்துவதற்கு ராமதாஸ் தயாராகி வருகிறார் என்பதை அவரது அறிக்கை புலப்படுத்துகிறது என்றும், ஜனநாயகத்துக்குப் புறம்பான இத்தகைய அநாகரிகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

மோடி புகாருக்கு பிரியங்கா பதிலடி.. மோடி புகாருக்கு பிரியங்கா பதிலடி.. "அவர் என்ன ஜாதி என்று எனக்கு இதுவரை தெரியாது"

மேலும், பொன்பரப்பி வன்கொடுமையைக் கண்டித்து உரையாற்றிய, பேராயர் எஸ்றா சற்குணம் மற்றும் முத்தரசன் இருவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

English summary
Thirumavalavan Said That Modi asking votes on the caste
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X