சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை சுத்தமாக வேண்டுமா? வாக்களியுங்கள் தேமுதிகவுக்கு... பிரேமலதா பிரச்சாரம்

Google Oneindia Tamil News

சென்னை : சுத்தமான சுகாதாரமான சென்னையை உருவாக்க தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என்று தேதிமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நாளையுடன் தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சார களம் ஓய உள்ள நிலையில் , வட சென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரி மோகன்ராஜை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார் .

Modi back as PM again, premalatha vijayakanth campaign

மோடி தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால், தமிழர் நலன் காக்கப்படும் என்று கூறினார் . தேமுதிக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால் கொடுங்கையூர் குப்பை கிடங்கு மாற்றப்படும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் மக்களிடம் வாக்குறுதி அளித்தார் .

இந்த தேர்தல் மூலம் மீண்டும் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக போது உறுதி , அந்த வகையில் நமது கட்சி வெற்றியாளர்கள் டெல்லி செல்லும் பொழுது உரிமையை கேட்க முடியும். அதன் மூலம் தொகுதிக்கு நல்ல திட்டங்களை கொண்டுவந்து எல்லாவிதத்திலும் முன்னேற்ற முடியும். எனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்.

Modi back as PM again, premalatha vijayakanth campaign

கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கு முழுமையாக அகற்றி சுத்தமான , சுகாதாரமான சென்னையை நிச்சயமாக உருவாக்குவோம் என்றும் உறுதியளித்தார்.

இதற்கிடையே, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பாலை வில்லிவாக்கத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் . அவரது பேச்சைக் கேட்கவும் அவரை காணவும் ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர்.

விஜயகாந்த்தா இது.. குழந்தையாக மாறி காட்சி தந்த விஜயகாந்த்தா இது.. குழந்தையாக மாறி காட்சி தந்த "கேப்டன்".. ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த மக்கள்!

அதே நேரம், அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தேமுதிக விஜயகாந்த் சென்னையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

English summary
Lok Sabha elections 2019 make sure that modi back as again PM says premalatha vijayakanth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X