சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி நினைத்தால் ஆட்சி கவிழும்.. ஸ்டாலின் பேச்சால் அதிமுக தலைகள் அதிர்ச்சி.. திமுக பிளான் இதுதானா?

பிரதமர் மோடி நினைத்தால் அதிமுக ஆட்சி கவிழும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்கு சேகரிப்பில் மு.க ஸ்டாலின்... செல்பி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்....

    சென்னை: பிரதமர் மோடி நினைத்தால் அதிமுக ஆட்சி கவிழும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.

    வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வேலூரில் பிரச்சாரம் செய்தார்.

    பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் என்ன ஆகும் என்பது தெரியும். மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இப்போது நினைத்தாலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும், அந்த எண்ணம் உள்ளது.

    கனவு காணுங்கள்.. கிண்டல் செய்த முதல்வர்.. ஒரே மாதத்தில் ஆட்சி கவிழும்.. சவால் விட்ட ஸ்டாலின்! கனவு காணுங்கள்.. கிண்டல் செய்த முதல்வர்.. ஒரே மாதத்தில் ஆட்சி கவிழும்.. சவால் விட்ட ஸ்டாலின்!

    மோடி என்ன

    மோடி என்ன

    மோடி நினைத்தால் ஒரே நாளில் ஆட்சி மாறும்; மாறக்கூடாது என அதிமுகவினர் காலிலேயே விழுந்து கிடக்கின்றனர். நிச்சயம் இந்த ஆட்சி கவிழப்போகிறதா இல்லையா என பொறுத்திருந்து பாருங்கள். ஏன் தற்போது கர்நாடகாவில் ஆட்சி கவிழ வில்லையா?. அப்படித்தான் விரைவில் தமிழகத்திலும் ஆட்சி கவிழும். இனி தமிழக அரசியலில் நடக்க போகும் விஷயங்களை பொறுத்திருந்து பாருங்கள், என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    ஸ்டாலின் பல விஷயங்களை மனதில் வைத்து இப்படி பேசியதாக கூறப்படுகிறது. மோடியை வைத்து அதிமுகவில் ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். எதிர்கால திட்டங்கள், லோக்சபா மசோதாக்கள் என்று பல விஷயங்களை கருத்தில் கொண்டு ஸ்டாலின் இப்படி பேசி வருகிறார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    என்ன உணர்ந்து

    என்ன உணர்ந்து

    பாஜகவின் ஒத்துழைப்பு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று ஸ்டாலின் உணர்ந்து இருப்பதாகவே தெரிகிறது. முழு மெஜாரிட்டி பெறாமல் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் கவிழ்க்க வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக பாஜகவின் ஆதரவு வேண்டும். கர்நாடகாவில் பாஜக மேலிடத்தின் முழு ஆதரவு மூலம்தான் ஆட்சி கவிழ்ந்தது.

    யார் உதவி

    யார் உதவி

    அதேபோல் தமிழகத்திலும் ஆட்சி மாற வேண்டும் என்றால் மத்திய பாஜகவின் உதவி வேண்டும். அதனால்தான் ஸ்டாலின் கர்நாடகாவை எடுத்துக்காட்டி தனது பேச்சில் கூறினார். ஆளுநரின் உதவி இருந்தால்தான் ஆட்சியை மாற்ற முடியும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். இதனால்தான் மோடி நினைத்தால் ஆட்சியை மாற்ற முடியும் ஸ்டாலின் வெளிப்படையாக கூறியுள்ளார்.

    அதிமுக ஆட்சி

    அதிமுக ஆட்சி

    தமிழகத்தில் என்னதான் அதிமுக ஆட்சியில் இருந்தாலும் திமுக கொஞ்சம் கூடுதல் வலிமையுடன் இருக்கிறது. இதனால் எதிர்கால கூட்டணி என்று பார்த்தால் அதிமுகவை விட திமுகவைத்தான் பாஜக அதிகம் விரும்பும். அதேபோல் அதிமுக கட்சியால் லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு சிறு நன்மை கூட ஏற்படவில்லை.

    பலம்

    பலம்

    மேலும் தற்போது திமுக மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் அதிமுகவை விட அதிக பலம் கொண்டு உள்ளது. வாக்கு வங்கியும் அதிகம் ஆகி இருக்கிறது. அடுத்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது. பாஜக இதை கண்டிப்பாக ஆராய்ந்து பார்க்கும் என்கிறார்கள். இந்த பலத்தை எல்லாம் திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் என்கிறார்கள்.

    மாற்றம்

    மாற்றம்

    பாஜகவிற்கு அடிமையாக அதிமுக செயல்படுகிறது என்று பலமுறை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் அவரே தற்போது மோடி நினைத்தால் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஸ்டாலின் கொஞ்சம் கீழே இறங்கி வந்து எதார்த்த அரசியலை செய்ய தொடங்கி இருக்கிறார். பாஜகவிற்கு கொஞ்சம் நெருக்கமாக திமுக மாறி வருகிறது என்கிறார்கள்.

    என்ஐஏ

    என்ஐஏ

    இதனால்தான் உபா சட்டதிருத்த மசோதாவை திமுக லோக்சபாவில் ஆதரித்தது. லோக்சபாவிற்கு வெளியே திமுக மசோதாவை எதிர்த்தாலும், வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவு அளித்தது. இதேபோல் மேலும் சில மசோதாக்களை திமுக ஆதரிக்கும். திமுகவின் இந்த மென்மையான போக்கிற்கு ஆட்சி மாற்ற திட்டம்தான் காரணம் என்கிறார்கள்.. இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஒரு மாதத்தில் என்னதான் நடக்கும் என்று பார்க்கலாம்!

    English summary
    What is going on? Modi can topple the government in Tamilnadu says M K Stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X