• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தமிழ் கடவுள் முருகனின் வாகனம் மயிலுக்கு உணவு கொடுக்கும் மோடி - வீடியோ செம வைரல்

|

சென்னை: தமிழ் கடவுள் முருகனின் வாகனமான மயிலோடு தனக்கு இருக்கும் பந்தம் நேசம் குறித்த வீடியோவை பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. இந்த வீடியோவை அவர் பதிவிட்ட சில மணி நேரத்தில் லட்சக்கணக்கானோர் அதைப் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர்.

    Modi Peacock | தமிழ் கடவுள் முருகனின் வாகனம் மயிலுக்கு உணவு கொடுக்கும் மோடி | Oneindia Tamil

    பிரதமர் வசிக்கும் லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் மோடி மயில்களை வளர்த்து வருகிறார். மயிலுக்காக பிரதமர் மோடி தனது வீட்டில் சில கட்டமைப்புகளை அமைக்கச் செய்துள்ளார். பறவைகள் கூடு கட்ட ஏதுவாக இருக்கும் என்பதற்காகக் குறிப்பிட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    Modi feeding lord murugan vahanam peacock - viral video

    மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்ட பதிவில், ஹிந்தி மொழியில் ஒரு கவிதையுடன் மயிலோடு இருக்கும் வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.

    இந்த வீடியோவை தனது ட்விட்டரில் மட்டுமின்றி, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிலும் மோடி பதிவிட்டிருக்கிறார். மயிலை ரசிக்கும் மோடியின் மனதில் பிறந்த கவிதையை எழுதி இந்த வீடியோவையும் பதிவிட்டிருக்கிறார்.

    வாக்கிங் செல்லும் மோடி கூடவே தோகை விரித்து நடனமாடும் மயில் என ரசிக்க வைக்கிறது. மயில்களுக்கு உணவுக் கொடுப்பது, அதனுடன் விளையாடுவது போன்றவைகளையும் இந்த வீடியோவில் சில போட்டோக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

    மோடி இந்த வீடியோ பதிவோடு மயிலின் பெருமைகளை விளக்கும் ஒரு கவிதையையும் பதிவிட்டுள்ளார். கண்ணனின் புல்லாங்குழல் இசையையும் தனது கவிதையில் கூறியுள்ளார் மோடி. பிரதமர் மோடி பருவ நிலை மாற்றம் குறித்து 2 புத்தகங்களை எழுதியுள்ளார். இதன் மூலம், இயற்கையின் மீது அதிக அக்கறை கொண்டவராக மோடி இருக்கிறார்.

    இந்திக்கு எதிராக ''போக்கிரிகள்'' கூச்சல்.. ஆயுஷ் செயலாளர் கோட்சே பகீர் பேச்சு.. வலுக்கும் எதிர்ப்பு!இந்திக்கு எதிராக ''போக்கிரிகள்'' கூச்சல்.. ஆயுஷ் செயலாளர் கோட்சே பகீர் பேச்சு.. வலுக்கும் எதிர்ப்பு!

    கந்த சஷ்டி கவசம், வேல் பூஜை என தமிழக பாஜகவினர் தமிழ் கடவுள் முருகன் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள நிலையில் மோடி தமிழ் கடவுள் முருகனின் வாகனமான மயிலுக்கு உணவு கொடுக்கும் வீடியோ பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     
     
     
    English summary
    Prime Minister Modi has set up some structures in his house for the peacock. Birds tend to build nests.Specific structures have been created for.With this video recording, Modi has also posted a poem explaining the pride of the peacock.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X