சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி அரசு நடத்தி வரும் கீழடி பெயரில் மோசடி.. தமிழிசை பரபரப்பு ட்வீட்

Google Oneindia Tamil News

Recommended Video

    கீழடி ஆய்வு பற்றி தமிழிசை பரபரப்பு ட்வீட்

    சென்னை: கீழடி பெயரில் மோடி அரசு மோசடி நடத்தி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கீழடி ஆய்வு மீண்டும் துவங்கும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். அதில், கீழடி ஆய்வு நிறுத்தப்படவில்லை என்று கூறுவதற்கு அவர் முனைந்துள்ளார். ஆனால் நடந்ததோ வேறு.

    Modi government cheat in the name of Kezhadi: Tamilisai Soundararajan

    தமிழிசை ட்வீட்டை பாருங்கள்: கீழடி ஆய்வு மீண்டும் துவங்கும்....திமுக .....யார் நிறுத்தினார்கள்?மோடி அரசு தொடர்ந்து நடத்தி வரும் கீழடி பெயரில் மோசடி. இவ்வாறு கூறியுள்ளார் தமிழிசை.

    மோடி அரசு, கீழடி பெயரில் மோசடி செய்துவருவதான பொருளில் தமிழிசையே கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசு தொடர்ந்து கீழடி அகழாய்வை நடத்தி வருகிறது. ஆனால், கீழடி பெயரில் மோசடி என்றுதான் குறிப்பிட நினைத்து, கவிதைபோல எழுதுகிறேன் என்று தவறான பொருள் வரும்படி செய்துள்ளார்கள். தமிழிசை ட்விட்டர் கணக்குக்கான அட்மின் இதுபோல தெரியாமல் குறிப்பிட்டுவிட்டாரா, அதையும் தமிழிசை படித்து பார்க்காமல் ஒப்புதல் கொடுத்துவிட்டாரா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

    இதையடுத்து நெட்டிசன்கள் தங்கள் கேலி, கிண்டலை தொடங்கியுள்ளனர்.

    3 நாள் கங்கை பயணம் முடிகிறது.. மோடியின் கோட்டையில் பிரியங்கா காந்தி.. வாரணாசியில் இன்று கூட்டம்! 3 நாள் கங்கை பயணம் முடிகிறது.. மோடியின் கோட்டையில் பிரியங்கா காந்தி.. வாரணாசியில் இன்று கூட்டம்!

    English summary
    Tamilisai Soundararajan Tweet says, Modi government cheat in the name of Kezhadi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X