சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி யோக்கியமானவராக இருந்தால்.. பேனர் வைத்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாது.. டிராபிக் ராமசாமி ஆவேசம்

பேனர் வைத்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வரக்கூடாது என டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பேனர் வைத்த நிகழ்ச்சிக்கு மோடி வரக்கூடாது.. டிராபிக் ராமசாமி-வீடியோ

    சென்னை: மோடி யோக்கியமானவராக இருந்தால்.. மக்களை மதிப்பதாக இருந்தால்.. பேனர் வைத்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என்றும் பேனர் விளம்பரம் இல்லாமல் பிரதமர் மோடி சென்னைக்கு வர மாட்டாரா? என்றும் டிராபிக் ராமசாமி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    தமிழக சைவ மற்றும் அசைவ ஹோட்டல் உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கமும், சிகரம் சாப்ட்வேர் டெக்னாலஜிஸும் இணைந்து (FOODEX) புட்டெக்ஸ் எனும் ஆப் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் டிராபிக் ொ கலந்து கொண்டு புதிய புட்டெக்ஸ் ஆப்பை திறந்து வைத்தார்.

    modi should not attend the functions which has banners says traffic ramasamy

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டின் விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிக்கின்ற வேளையில், மக்களை பாதுகாக்க வேண்டிய பிரதமருக்கு 41-விளம்பர பலகைகள் வைக்க வேண்டுமென தகுதி இல்லாத IAS அதிகாரி மனு கொடுத்துள்ளார்.

    அந்த மனு விசாரணையின் போது நான் கோர்ட்டில் இல்லை. அதனால் இன்று இந்த வழக்கை சந்திக்க இருக்கிறேன். சட்ட விரோதமாக பேனர் வைக்கிறதே தப்பு.. பேனர் விளம்பரம் இல்லாமல் பிரதமர் மோடி சென்னைக்கு வர மாட்டாரா?

    மகாபலிபுரத்தில், மோடி வருகையையொட்டி மாவட்ட கலெக்டர், அந்த பகுதியில் உள்ள ஏழை மக்களை விரட்டி மோடிக்கு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார். மானங்கெட்ட இந்த அரசாங்கம் தானாக பதவி விலக வேண்டும் இல்லையென்றால் பொதுமக்கள் உங்களை ஓட ஓட விரட்டுவார்கள்.

    வரும் 25-ஆம் தேதி வரை பேனர் வைக்க தடை இருப்பதை அறிந்தும் அதை பொறுக்க முடியாதா? மோடி யோக்கியமாக இருந்தால்.. மக்களை மதிப்பதாக இருந்தால்.. பேனர் வைத்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாது. எடப்பாடி பழனிச்சாமி வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் கோர்ட்டில் அசிங்கபடுத்தி விடுவேன்.

    34 உயிர்களை பலிவாங்கிய பிறகு, பேனர் கலாச்சாரம் ஒரு முடிவுக்கு வரும்போது... தமிழக அரசு இத்தகைய செயலை செய்வது மனசாட்சிக்கு விரோதம்" என்றார் ஆவேசமாக.

    English summary
    Social Activist Traffic Ramasamy says that, PM Modi should not attend the functions which has banners
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X