• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சென்னை.. ஐஏஎஸ் அதிகாரியின் கணவரிடம் வங்கி அதிகாரி போல் பேசி பணம் சுருட்டல்: மோசடி நபர்கள் கைவரிசை

Google Oneindia Tamil News

சென்னை: வங்கி அதிகாரிகள் போல் நடித்து செல்போனில் பேசும் நபர்கள் இதுநாள்வரை சாதாரண மக்களை மட்டுமே ஏமாற்றி வந்த நிலையில் தற்போது சென்னையில் ஐஏஎஸ் அதிகாரியின் கணவரிடமே கைவரிசை காட்டியுள்ளனர். ரூ.10 ஆயிரத்தை அபேஸ் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மோசடியில் பல விதம் உள்ளது. அதில் ஒருவகை கவனத்தை திசைத்திருப்பி பணம் நகைகளை திருடுவது. அதிலும் நுணுக்கமானது அதிகாரிகள் போல், வங்கியிலிருந்து பேசுவது போல் பேசி நவீன முறையில் பணம் பறிக்கும் ஆன் லைன் திருடர்கள்.

இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்! இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்!

விஞ்ஞான வளர்ச்சி மனிதர்களுக்கு உபயோகப்படுகிறதோ இல்லையோ இதுபோன்ற நபர்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு தேவை கொஞ்சம் டெக்னாலஜி நிறைய மக்களின் அறியாமை. இதில் அறியாமை என்பது படிப்பு, பதவி சார்ந்தது அல்ல. ஏமாறும் யாரும் அறியாமையில் உள்ளவர்களே.

 ஏடிஎம் கார்டு மோசடி

ஏடிஎம் கார்டு மோசடி

திடீரென உங்களுக்கு ஒரு போன் வரும் வங்கியிலிருந்து பேசுகிறேன், உங்கள் ஏடிஎம் கார்டு காலாவதியாக போகிறது உடனடியாக 16 எண்களை சொல்லுங்கள் என்பார்கள். சொன்னவுடன் உடனே சி.வி எண்களை சொல்லுங்கள் என்பார்கள் அடுத்து கார்டு வரும் என்று சொல்லி வைத்து விடுவார்கள்.

உடனடியாக போலி கார்டு ரெடியாகி உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணம் அபேஸ் செய்யப்படும். இத்தகைய மோசடி இப்போது பழைய ஃபேஷனாகிவிட்டது. இதுபோன்ற மோசடிகள் 6 ஆண்டுகளுக்கு முன் அதிக அளவில் பரவலாக நடந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் காவல்துறையினர், உயர் அதிகாரிகள் அதிக அளவில் ஏமாந்ததுதான்.

அந்த நேரத்தில் சைபர் பிரிவு வராத நேரம், இவர்களை பிடிக்க மத்திய குற்றப்பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் பின் சிலரை பிடித்ததாக சொன்னார்கள் ஆனால் அவர்கள் வேறு வேறு வடிவில் மோசடியை செய்துக்கொண்டேத்தான் இருந்தனர்.

 புது டெக்னிக்குக்கு மாறிய மோசடி நபர்கள்

புது டெக்னிக்குக்கு மாறிய மோசடி நபர்கள்


இத்தகைய மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வர ஆரம்பித்ததும் அவர்களும் தங்கள் மோசடி டெக்னிக்கை மாற்றிக்கொண்டனர். அதாவது ஆதார் கார்டு காலாவதி ஆகப்போகிறது, ரேஷன் கார்டில் ரூ.1000 அரசு அளிக்கிறது, இதற்காக பெயர் மாற்ற வேண்டும் என்று சொல்லி ஓடிபி எண் அனுப்பி அதைச் சொல்லச்சொல்லி மோசடி செய்வது என்று நவீனத்துக்கு மாறிவிட்டனர்.

உணவு பொருள் ஆர்டர் செய்த யானைக்கவுனி பெண்ணுக்கு பொருள் வராத நிலையில் அவர் எண்ணுக்கு தொடர்புக்கொண்ட மர்ம நபர்கள் உங்களுக்கு ஒரு ஓடிபி வரும் அதை அனுப்புங்கள் உங்கள் பணம் உங்கள் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என்று சொல்லி ரூ.57000 வரை ஏமாற்றி எடுத்துவிட்டனர்.

 ஐஆர்எஸ் அதிகாரியிடம் கைவரிசை

ஐஆர்எஸ் அதிகாரியிடம் கைவரிசை


இதேப்போன்று தனக்கு வந்த பொருள் சரியில்லை என திருப்பி அனுப்பி கட்டிய பணத்தைக் கேட்ட ஐஆர்எஸ் அதிகாரியிடம் வாடிக்கையாளர் சேவை மையம் போல் பேசி ஓடிபி எண் கேட்டு ரூ.50 ஆயிரம் வரை அபேஸ் செய்தது சில மாதங்களுக்கு முன் மந்தைவெளியில் நடந்தது.

இவர்கள் மோசடி செய்வது குறித்து சைபர் போலீஸாரும், டிராய் அமைப்பும், அரசும் பல்வேறு எச்சரிக்கைகளை விளம்பரப்படுத்தியும் அந்த நேரத்தில் அது சட்டென்று ஞாபகத்திற்கு வராமல் ஓடிபி எண்ணை அனுப்பி பணத்தை பறிகொடுப்பவர்கள் ஏராளம்.

இதில் படித்தவர், படிக்காதவர் என்கிற பாகுபாடு இல்லை. அறியாமை மட்டுமே காரணம். இதுபோன்ற மோசடி பேர்வழிகள் குறித்து பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும் மக்களின் அறியாமையின் மேலுள்ள நம்பிக்கையில் இவர்கள் கைவரிசையும் தொடர்கிறது.

 ஐஏஎஸ் அதிகாரியின் கணவரிடம் கைவரிசை

ஐஏஎஸ் அதிகாரியின் கணவரிடம் கைவரிசை

இதேப்போன்றதொரு சம்பவம் ஐஏஎஸ் அதிகாரியின் கணவருக்கு நடந்துள்ளது. பணம் எடுக்கப்பட்ட விவகாரமே மிக தாமதமாக தெரிந்து புகார் அளித்துள்ளனர். சென்னையில் வசிக்கும் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் கணவர் அன்பழகன்(58) சென்னை பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
விருகம்பாக்கத்தில் வசிக்கிறார். வழக்கம்போல் இவரது செல்போன் எண்ணுக்கு 6026330418, 9564166183, 9593702257 என்கிற 3 எண்களிலிருந்து தொடர்ச்சியாக போன் வந்துள்ளது.

செல்போனில் தொடர் கொண்ட நபர் SBI yono கணக்கை( இது செல்போன் ஆப் மூலம் செயல்படும் கணக்கு) காலாவதியாகிவிட்டது உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று கூறி அவரது வங்கி கணக்கு எண், ரகசிய எண் ஆகியவற்றை கேட்டு வாங்கியுள்ளனர். பின்னர் ஓடிபி எண் வரும் அதை சொல்லுங்கள் என்று கூறி அந்த எண்ணையும் வாங்கிக்கொண்டு உங்கள் கணக்கு புதுப்பிக்கப்பட்டுவிட்டது என்று நன்றிக்கூறி போனை வைத்துள்ளனர்.

 10 ஆயிரம் பணம் போச்சு

10 ஆயிரம் பணம் போச்சு

பேராசிரியரும் வங்கி அதிகாரிகள் தான் பேசியுள்ளனர் என்று நினைத்துள்ளார். ஆனால் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.10000 ஆயிரம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மோசடி எண்களை வைத்து நபர்களை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து சைபர் பிரிவு காவல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஓடிபி எண் என்பது நமக்காக வரும் ரகசிய எண். நீங்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கின் வாடிக்கையாளரா என்பதை உறுதிப்படுத்த வரும் எண் அதை வங்கி ஊழியரே கேட்டாலும் கொடுக்கக்கூடாது என்று திரும்பத்திரும்ப எச்சரித்தாலும் சமயத்தில் மறந்து அதை கொடுப்பதால் நமது பணத்தை பறிகொடுக்கும் நிலை ஏற்படுகிறது.

 ஓடிபி எண் யாருக்காக

ஓடிபி எண் யாருக்காக

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு அனுப்பப்படும் ஓடிபி எண் உங்களுக்கு மட்டுமே பயன்பாட்டுக்கானது, அதை எக்காரணம் கொண்டும் யாருக்கும் கொடுக்கக்கூடாது, கேட்டாலும் அதை அவர்களுக்கு உணர்த்தி நாம் உஷாராக இருப்பதை வெளிப்படுத்தவேண்டும். வங்கி கணக்கு எண், ஏடிஎம் கார்டு எண் எதையும் யார் கேட்டாலும் கொடுக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.

English summary
Money laundering by talking to IAS officer's husband like a bank officer in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X