சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீ 1000 கொடுத்தால் நான் 2000.. நீங்க 2000 கொடுத்தா நாங்க 4000.. அதிர வைக்கும் 4 தொகுதி இடைத்தேர்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    அவங்க 1000 கொடுத்தால் நான் 2000.. அதிர வைக்கும் இடைத்தேர்தல்- வீடியோ

    சென்னை: ஒரு "திருமங்கலம் ஃபார்முலா"வுக்கே அன்று வாயை பிளந்தனர்.. ஆனால் இன்று 4 தொகுதிகளிலுமே அதே "திருமங்கலம் பார்முலா"தான்!

    எப்படியும் எடப்பாடி அரசுக்கு மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் தேவை என்றாலும், கையில் உள்ளதோ 114தான். அதனால் 4 இடங்களில் மட்டும் ஜெயித்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு கணக்கு!

    மற்றொரு பக்கம், எம்எல்ஏக்கள் தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் இவர்களை தவிர அமமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு என மொத்தம் 6 பேர் ஆதரவா, எதிர்ப்பா என்று வெளிப்படையாக சொல்லாமல் குழப்பி அடிக்கிறார்கள். ஒருவேளை எதிராக போய்விட்டால், ஏற்கனவே 4 + 6 என்று 10 பேர் ஆதரவு எடப்பாடிக்கு தேவைப்படும். இது மற்றொரு கணக்கு.

    வாம்மா.. ஒரு வாய் சாப்பிட்டு போம்மா.. பாசத்துடன் அழைத்த தேனிக்காரங்க.. கஸ்தூரிக்கு சந்தோஷம்! வாம்மா.. ஒரு வாய் சாப்பிட்டு போம்மா.. பாசத்துடன் அழைத்த தேனிக்காரங்க.. கஸ்தூரிக்கு சந்தோஷம்!

    முக ஸ்டாலின்

    முக ஸ்டாலின்

    இதற்கு நடுவில்தான் தினகரனும், முக ஸ்டாலினும் காய் நகர்த்துகிறார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் மறைமுக உள்ளடி வேலைகள்தான் அதிகமாக நடந்து வருகிறது. இப்போதைக்கு எடப்பாடி மீது நிறைய அதிருப்திகள் கட்சிக்குள் உள்ளதாம். ஓபிஎஸ் எந்த பக்கம் இருக்கிறார், இருக்க போகிறார் என்ற அளவுக்கு அவரது நிலைப்பாடு உள்ளது. அதனால் எடப்பாடி தன் அரசையும், பலத்தையும் நிரூபிக்க "வைட்டமின் ப" வை கையில் எடுத்துள்ளாராம்!

    இடைத்தேர்தல்

    இடைத்தேர்தல்

    இதேபோலதான் திமுகவும்.. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக வாரி இறைத்ததில் பாதிதான் திமுக உள்ளே இறக்கியதாம். ஆனால் இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை திமுகவும் அதிமுகவுக்கு சரிக்கு சமமாக இறங்கி உள்ளதாக தெரிகிறது. என்னதான் திண்ணை பிரச்சாரம் திமுகவுக்கு கை கொடுத்தாலும், கவனிக்க வேண்டிய விஷயத்தை தாராளமாக கவனித்தே ஆக வேண்டும் என்ற யதார்த்தத்தையும் புரிந்து கொண்டு வேலை பார்த்து வருகிறது.

    கோடீஸ்வர வேட்பாளர்கள்

    கோடீஸ்வர வேட்பாளர்கள்

    ஆனால், திமுக, அதிமுகவை விட ரொம்ப ஹாயாகவும், தெம்பாகவும் இருப்பவர் டிடிவி தினகரன்தான். ஏனென்றால், வேட்பாளர்களே கோடீஸ்வரர்களாக தேர்ந்தெடுத்துள்ளார். 22 தொகுதி வேட்பாளர்களில் 19 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் என்றால் சும்மாவா? கட்சி தலைமை ஏதாவது பார்த்து பண்ணுமா என்ற ஏக்க நிலைமை இவர்களுக்கு கிடையாது. தண்ணீராக இறைத்து, சீட்டை பிடிக்கதான் முயல்வார்கள்.

    "வைட்டமின் ப"

    எப்படியாவது ஆட்சியை பிடிப்பது, எப்படியாவது ஆட்சியை கவிழ்ப்பது, எப்படியாவது ஆட்சியை தக்க வைப்பது என முத்தரப்பிலும் முண்டியடிக்கிறார்கள். அதனால் , திமுக, அதிமுக, அமமுக - அந்த மூன்று கட்சிகளுமே "வைட்டமின் ப" வை நம்பியே களம் கண்டு வருகிறார்கள்.

    English summary
    There is a tough competition between AIADMK, DMK and AMMK in by elections. So Money Plays huge again in 4 constitutions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X