சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த மனசுதான் கடவுள் - நீரில் தத்தளித்த கோழிக்குஞ்சை காப்பாற்றிய குரங்கு

வாளியில் இருந்த தண்ணீரில் தடுமாறி விழுந்து வெளியே வர முடியாமல் தத்தளித்த கோழிக்குஞ்சுக்கு கைகொடுத்து காப்பாற்றி அதை தாய் கோழியிடம் சேர்த்துள்ளது குரங்கு ஒன்று.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்பு எட்டு திசைகளிலும் பரவி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் சில சம்பவங்கள் பலரையும் அன்பு, கருணை என்றால் என்ன என்று பலருக்கும் புரிய வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்த கோழிக்குஞ்சுக்கு கை கொடுத்த குரங்கு அதை காப்பாற்றி தாய் கோழியிடம் சேர்த்துள்ளது. அதற்கு பக்கத்தில் இருந்த நாயும் உதவி செய்துள்ளது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அன்பான இதயங்கள் எப்போதுமே அழகானவை என்று பதிவிட்டுள்ளார் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார்.

Recommended Video

    நீரில் தத்தளித்த கோழிக்குஞ்சை காப்பாற்றிய குரங்கு - வீடியோ

    ஆறு அறிவு படைத்த மனிதர்களை விட ஐந்து அறிவு படைத்த விலங்குகளுக்கும் பறவைகளுக்கு இப்போது அன்பும் கருணையும் அதிகரித்து வருகிறது. விபத்தில் சிக்கிய மனிதர்களை காப்பாற்றுவதை விட செல்ஃபி எடுப்பதுதான் இப்போது அதிகரித்து வருகிறது. ஆனால் ஆபத்தில் சிக்கிய ஒரு சின்னஞ்சிறிய பறவையை காப்பாற்ற ஒரு குரங்கு எடுத்துக்கொண்ட முயற்சியை சாதாரணமாக சொல்லிவிட முடியாது.

    Monkey helps baby chicken viral video

    கருணை உள்ளமும் அன்பும் நிறைந்த மனசுதான் கடவுள் என்பார்கள். இங்கே கோழிக்குஞ்சை காப்பாற்ற முயற்சி செய்த குரங்கும் அதற்கு உதவி செய்த நாயும்தான் அந்த பறவைக்கு கடவுள்.

    தடுமாறும் போது தாங்கி பிடிக்க வேண்டும். கவலையில் கண்ணீர் சிந்தும் போது துடைக்கின்ற கைகள் வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் அப்படி யாரையும் எதிர்பார்க்க முடியாது. விலங்குகளும் பறவைகளும்தான் மனிதன் மறந்து வரும் அன்பு கருணையை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன.

    OTT ரொம்பப் பிடிச்ச தளம் இதுதானாம்.. மக்களே அடிச்சுச் சொல்லிட்டாங்க பாருங்கOTT ரொம்பப் பிடிச்ச தளம் இதுதானாம்.. மக்களே அடிச்சுச் சொல்லிட்டாங்க பாருங்க

    English summary
    The monkey handcuffed to a baby chicken that had fallen into the water from the bucket, saved it and added it to the mother hen. The dog on the side has helped too.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X