சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம்.. மெட்ரோவில் மாதாந்திர பாஸ் அறிமுகம்

சென்னை மெட்ரோவில் மாதாந்திர பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மெட்ரோவில் மாதாந்திர பாஸ் அறிமுகம்- வீடியோ

    சென்னை: மெட்ரோ ரயிலில் ரூ.2500க்கான மாதாந்திர பயண அட்டையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கும், பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    Monthly Pass to Metro Train

    பொதுமக்களிடையே இந்த மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இந்த சேவை தொடங்கப்பட்டபோது கட்டணம் அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டது.

    அதனால் மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளை கவர சில சலுகைகள் அளிக்க முன் வந்தது. அதன்படி முதல்கட்டமாக, வரிசையில் நின்று வாங்குவதை தவிர்க்க ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பிறகு ஒருநாள் பயண அட்டை அறிமுகம் செய்தது.

    இந்த நிலையில் அலுவலகத்துக்கு செல்வோரின் நலனை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரெயில் நிர்வாகம், மாதாந்திர பாஸ் அட்டை அறிமுகம் செய்திருக்கிறது. அதன்படி ரூ.50 முன் பணம் தந்து, ரூ.2,500-யை செலுத்தி இந்த அட்டையை பெற்று கொள்ளலாம்.

    இதன்படி, ஒரு மாதம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும், எந்த ஸ்டேஷனில் இருந்தும் பயணம் செய்யலாம் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Rs. 2500 Monthly Pass has introduced in Chennai Metro Train
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X