சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேய்களா.. பாண்டிச்சேரி பேரையே கெடுத்திட்டீங்களேடா.. டாஸ்மாக் அலப்பறைகள்!

Google Oneindia Tamil News

சென்னை: எங்கெங்கும் டாஸ்மாக்தான்.. கடந்த 2 நாட்களாக. கொரோனாவைக் கூட விட்டு விட்டார்கள். 2 நாள் மட்டுமே திறந்திருந்த டாஸ்மாக் கடைகளை வைத்து குவிந்துவிட்டன மீம்ஸ்களும்.

டாஸ்மாக் கடை திறப்பை ஏதோ திருவிழா ரேஞ்சுக்கு தமிழ்நாட்டு குடிமகன்கள்கொண்டாடித் தீர்த்து விட்டனர். தமிழகம் முழுவதும் திறந்த மதுக் கடைகளில்கூட்டம் கட்டி ஏறியது. சமூக இடைவெளி காணாமல் போனது . பெண்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறினர். ஆனால் கடைகள் மூடப்படவில்லை.

இந்த நிலையில் கோர்ட் தலையீட்டின்பேரில் தற்போது கடைகளை மூடி விட்டனர். இந்த நிலையில், இதை வைத்து வரும் மீம்ஸ்களிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

கொஞ்சநஞ்ச ஆட்டமா ஆடுனீங்க... சோனமுத்தா எல்லாம் போச்சா!கொஞ்சநஞ்ச ஆட்டமா ஆடுனீங்க... சோனமுத்தா எல்லாம் போச்சா!

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

உலக வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டுல இருந்து பாண்டிச்சேரிக்கு பாட்டில் கடத்தி மாட்டிருக்கானுங்க.. பாண்டிச்சேரியோட மரியாதையே போச்சுடா உங்களால. இது உண்மைதான் வழக்கமாக அங்கிருந்துதான் சரக்கு கடத்துவாங்க. அங்கு கடைகள் இல்லாததால் இங்கிருந்து போய் விட்டது.

அடிக்கறீங்க

அடிக்கறீங்க

அப்படி என்னக் கோட்டுட்டான்.. ஏன்ணே அவன அடிக்கறீங்க... சரக்கு மிக்ஸிங்குக்கு கபசுர குடிநீர மிக்ஸ் பண்ணி அடிச்சா கொரோனா செத்துருமான்னு கேக்குரான்பா... இதெல்லாம் ரொம்ப ஓவர்தான். இருந்தாலும் குடிச்சவனுக்கு தண்ணீருக்கும்,கபசுர நீருக்கும் வித்தியாசம் தெரியவா போகுது.

கல்யாண வீடு

கல்யாண வீடு

இழவு வீட்டுக்கு 10 பேருதான் போகணும்
கல்யாண வீட்டுக்கு 20 பேருதான் போகணும்

ஆனா டாஸ்மாக்கிற்கு மட்டும் எவ்ளோ பேர்னாலும் போகலாமோ.. இதுவும் வாஸ்தவமான கேள்விதான். எல்லாத்துக்கும் தடை விதிச்ச அரசு இதற்கு மட்டும் தடை விதிக்காதது ஆச்சரியம்தானே.

வாயில் அடிங்க

வாயில் அடிங்க

நீ குடிகாரன்தான்டா
என்னைது குடிகாரனா
வாயில அடிங்க.. வாயில் அடிங்க...

மதுப்பிரியர்னு சொல்லுங்க எல்லா சேனலயும் அப்படிதான் சொல்லுறாங்க... என்னத்த சொல்ல மதுப் பிரியர், குடிமகன். என்று செல்லம் கொஞ்சிக் கொஞ்சி இந்த மது அருந்துவோரை நாமதான் கெடுத்து வச்சிருக்கோம்.

English summary
Memes roaming in social medias about Tasmac opening in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X