சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்: வானளாவிய அதிகாரம் பெற்ற ஓபிஎஸ்-இபிஎஸ்: தீர்மானம் 3 சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

அதிமுக செயற்குழு பலத்த எதிர்ப்பார்ப்புடன் தொடங்கிய நிலையில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒற்றைத்தலைமை நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் ஒற்றை வாக்கில் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் வானளாவிய அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். இருவர் தேர்வையும் பொதுக்குழு விதி மூலம் மாற்ற முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக சட்ட விதிகளில் மாற்றம்: கட்சித்தலைமை தேர்வில் மாற்றம் அதிமுக சட்ட விதிகளில் மாற்றம்: கட்சித்தலைமை தேர்வில் மாற்றம்

அதிமுக செயற்குழு

அதிமுக செயற்குழு

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மோதலுடன் முடிவடைந்த நிலையில் இன்று கூடிய செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் அதிகாரம் அதிகரிக்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒற்றை வாக்கு முறையில் தேர்வு

ஒற்றை வாக்கு முறையில் தேர்வு

கட்சியின் சட்ட விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றைவாக்கு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அடிப்படை விதிகளில் மாற்றம்

அடிப்படை விதிகளில் மாற்றம்

கட்சியில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வர், கட்சியின் திட்ட விதிகளை மாற்றும் அதிகாரம் பொதுக்குழுவிற்கு உண்டு என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுகவின் விதி என் 20 பிரிவு 2 , விதி எண்45, 40 உள்ளிட்டவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

3 சட்ட விதிகளில் மாற்றம் என்னென்ன? சிறப்புத் தீரமானம் என்ன சொல்கிறது?

3 சட்ட விதிகளில் மாற்றம் என்னென்ன? சிறப்புத் தீரமானம் என்ன சொல்கிறது?

அதிமுக செயற்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட 3 வது சிறப்புத் தீர்மானம் கே.பி.முனுசாமியால் முன் மொழியப்பட்டது.

சிறப்புத் தீர்மானம் அதிமுக சட்டதிட்ட விதி முறைகளில் செய்யப்படும் மாற்றங்களும் திருத்தங்களும்.

முன்னர் இருந்த விதி 20

முன்னர் இருந்த விதி 20

செயற்குழு ஏகமனதாகத் ஒப்புதலைப் பெற்று ஏற்றுக் கொள்ளப்படுதல் அமலில் உள்ள சட்ட விதிமுறைகள் விதி 20 ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தற்போது திருத்தம் விதி 20 பிரிவு 2

தற்போது திருத்தம் விதி 20 பிரிவு 2

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்குகளின் மூலம் இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள்.

முன்னர் இருந்த விதி 43

முன்னர் இருந்த விதி 43

விதி 43 திருத்தம் கட்சி சட்ட விதிமுறைகளை ஏற்றமும் நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகவும் மாற்றப்பட்ட விதி கட்சியின் சட்ட விதிகளை ஏற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்தது ஆகும்.

திருத்தப்பட்ட விதி

திருத்தப்பட்ட விதி

கட்சி சட்ட விதிமுறைகளை ஏற்றமும் நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகவும் மாற்றப்பட்ட விதி கட்சியின் சட்ட விதிகளை ஏற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்தது ஆகும். "ஆனால் இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கட்சி ஒருங்கிணைப்பாளர், கட்சி ஒருங்கிணைப்பாளர், கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல.''

திருத்தத்துக்கு முன் சட்ட விதி 45

திருத்தத்துக்கு முன் சட்ட விதி 45

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் :-
மேலே கூறப்பட்டுள்ள சட்ட திட்ட விதிகளில் எந்த விதியைத் தளர்த்துவதற்கும், விதி விலக்கு அளிப்பதற்கும் கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு முழு அதிகாரம் உண்டு.

திருத்தப்பட்ட விதி 45

திருத்தப்பட்ட விதி 45

கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்அதிகாரம் :-
மேலே கூறப்பட்டுள்ள சட்ட திட்ட விதிகளில் எந்த விதியையும் தளர்த்துவதற்கும், விதி விலக்கு அளிப்பதற்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு முழு அதிகாரம் உண்டு. "ஆனால்,இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும், விலக்கு அளிப்பதற்கோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை.''

Recommended Video

    அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கை - ஜெயக்குமார்
    வானளாவிய அதிகாரம் பெற்ற இருபதவிகள்

    வானளாவிய அதிகாரம் பெற்ற இருபதவிகள்

    இவ்வாறு சிறப்புத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சியில் மிகுந்த அதிகாரம் பெற்றவர்களாகவும், பொதுக்குழுவால்கூட மாற்றப்பட முடியாத தலைவர்களாகவும் ஓபிஎஸ்-இபிஎஸ் இனி இருப்பர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை பொதுக்குழு கூட்டி மாற்றவோ, அதிகாரத்தை குறைக்கவோ முடியாது என்பது உறுதியாகியுள்ளது. இதை பொதுக்குழுவில் வைத்து இறுதிப்படுத்த வேண்டும்.

    English summary
    Changes in AIADMK party rules: திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய தீர்மானம் 3 அடிப்படையில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் வானளாவிய அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். இருவர் தேர்வையும் பொதுக்குழு விதி மூலம் மாற்ற முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X