• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மாஜி அமைச்சர் மணிகண்டனின் செல்போன்களில் ஷாக்.. 100க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோ, படங்கள் பறிமுதல்

Google Oneindia Tamil News

சென்னை: தன்னை ஏமாற்றியதாக நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் செல்போன்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோ, படங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், விஜய் வசந்த், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடப்பில் வெளியான படம் நாடோடிகள், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி(36). இவர் அதிமுக அமைச்சரவையில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் திருமணம் செய்யாமல் ஐந்து வருடங்களாக சேர்ந்து வாழ்ந்ததாக அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அத்துடன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரே வீட்டில் கணவன்- மனைவி போல் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகாரும் தெரிவித்தார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த தனது புகாரில், 3 முறை கருவுற்றதாகவும் அனால் என்னை கட்டாயப்படுத்தி மணிகண்டன் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியிருந்தார்.இந்த புகார் குறித்து விசாரணை நடத்த அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசாருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதன்படி விசாரணை நடந்து வருகிறது.

வழக்கு

வழக்கு

சாந்தினியின் புகாரின் பேரில் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக ஐபிசி 313, 323, 376, 417, 506(i) மற்றும் 67(ஏ) தொழில் நுட்ப சட்டப்பிரிவு உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் மணிகண்டன் தலைமறைவானார். அவரை பிடிக்க 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இதற்கிடையே, பெங்களூரு எலட்க்ரானிக் சிட்டி அடுத்த கெப்பகோடி பகுதியில் உள்ள ரிசாட்டில் மணிகண்டன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் அப்போது பறிமுதல் செய்தனர். பின்னர், சென்னை அழைத்து வரப்பட்ட மணிகண்டனிடம், அடையார் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, மணிகண்டன் நாங்கள் இருவரும் சம்மதத்துடன் குடும்பம் நடத்தினோம். நான் சாந்தினியை கட்டாயப்படுத்தி குடும்பம் நடத்தவில்லை என்று கூறியிருக்கிறார்.

கட்டாயக் கருக்கலைப்பு குறித்து போலீசார் கேட்ட போது எந்த பதிலும் அளிக்கவில்லையாம். அதேநேரம் நிர்வாண படங்கள் அனுப்பி மிரட்டியதாக கூறப்படும் புகாரையும் மணிகண்டன் ஏற்கமறுத்துவிட்டாராம். இதையடுத்து போலீசார் மணிகண்டனை ஞாயிறு மாலை சைதாப்பேட்டை 17வது நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் வீட்டில் ஆஜர்படுத்தி வரும் ஜூலை 2 தேதி வரை சிறையில் அடைத்தனர்.

படுக்கை அறை காட்சிகள்

படுக்கை அறை காட்சிகள்

அதைதொடர்ந்து மணிகண்டனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் எந்த ஆதாரங்களும் போலீசுக்கு கிடைக்கவில்லை. இதனால் 2 செல்போன்களையும் சைபர் க்ரைம் போலீசாரிடம் அளித்து உதவி செய்ய கோரினர். அதன்பின்னர் ஆய்வு செய்தபோது, நடிகை சாந்தினியுடன் ஒன்றாக படுக்கை அறையில் நிர்வாண நிலையில் எடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

அதில் பெரும்பாலான வீடியோக்கள் குளியல் அறையில் இருவரும் ஒன்றாக குளிக்கும் காட்சிகள் மற்றும் படுக்கை அறையில் இருவரும் மது அருந்தும் காட்சிகள். இந்த சம்பவங்களில் இருவரும் ஆடை இல்லாத நிலையில் இருந்த காட்சிகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அதன் உண்மை தன்மை அறிய தடயவியல் துறையின் ஆய்வுக்கு போலீசார் அனுப்பி உள்ளனர். அதேநேரம் இந்த வழக்கில் நடிகை சாந்தினியை மணிகண்டனுக்கு அறிமுகம் செய்து வைத்து பல வகையில் உதவி செய்து வந்த பரணியை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

English summary
Police say more than 100 nude videos and pictures have been confiscated from the cell phones of AIADMK ex-minister Manikandan, who was arrested on a sexual harassment complaint lodged by actress Chandini.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X