சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூண்டோடு காலியாகிறது கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்!

Google Oneindia Tamil News

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏறத்தாழ ரஜினி மக்கள் மன்றம் கூண்டோடு காலி ஆகப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

ரஜினி மக்கள் மன்றத்தின், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 350 பேர் இம்மாதம் திமுகவில் இணைந்தனர்.

கிருஷ்ணகிரி, மாவட்டச் செயலாளராக இருந்து வந்த மதியழகன், ரஜினி மக்கள் மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து திமுகவிற்கு அவர்கள் சென்றனர்.

20 ஆயிரம் பேர் இந்த நிலையில் கிருஷ்ணகிரி, ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 23ம் தேதி இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம்.

20 ஆயிரம் பேர் இந்த நிலையில் கிருஷ்ணகிரி, ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 23ம் தேதி இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி, ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 23ம் தேதி இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம்.

பூர்வீக மாவட்டம்

பூர்வீக மாவட்டம்

இதனால் ரஜினிகாந்த் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த ஏற்கனவே தனது மூதாதையரின் சொந்த மாவட்டம் கிருஷ்ணகிரி தான் என்றும், தான் பூர்வீகமாக தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறியிருந்தார். ஆனால் இப்பொழுது அவரது சொந்த மாவட்டத்திலேயே ரஜினி மக்கள் மன்றம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

பொறுப்புகள்

பொறுப்புகள்

லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று ரஜினிகாந்த் நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர் செங்குட்டுவன், இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஜினியின் அரசியல் வருகை தாமதம் ஆவதாலும், மற்றும் புதிதாக மக்கள் மன்றத்திற்கு வந்தவர்களுக்கு பொறுப்புகள் கிடைப்பதாலும் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக வியூகம்

திமுக வியூகம்

கரூர் மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் ஆதரவாளர்களை திமுக தன்பக்கம் ஈர்த்துள்ளது. இதனால் டிடிவி தினகரன் தரப்புக்கு ஷாக் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்திற்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது திமுக.

English summary
More than 20,000, Rajini Makkal mandram cadres in Krishnagiri will join DMK as the actor make announcement over Lok Sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X