சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 மாதத்தில் 3 லட்சத்து 50,000 பேருக்கு வேலை காலி.. ஆட்டோமொபைல் துறையில் பெரும் வீழ்ச்சி.. ஷாக்!

ஆட்டோமொபைல் துறையில் கடந்த 4 மாதங்களில் மொத்தம் 3,50,000 பேர் வேலையைவிட்டு நீக்கப்பட்டு உள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஆட்டோமொபைல் துறையில் கடந்த 4 மாதங்களில் மொத்தம் 3,50,000 பேர் வேலையைவிட்டு நீக்கப்பட்டு உள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு காலத்தில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்த துறைகளில் ஒன்றாக ஆட்டோமொபைல் துறை இருந்தது. ஆயிரக்கணக்கில் இந்த துறையில் பலர் வேலை வாய்ப்பை பெற்றனர். சென்னையில் முக்கியமாக கார், பைக் தொழிற்சாலைகள் வரிசையாக அமைக்கப்பட்டது.

அதன்பின் பணமதிப்பிழப்பு நீக்கத்தை அடுத்து வரிசையாக இந்த தொழிற்சாலைகள் இழப்பை சந்திக்க தொடங்கியது. இப்போது தொடர்ந்து இந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எல்லாம் இழப்பை சந்தித்து வருகிறது.

தீவிரவாதி ஹபீஸை வைத்து காஷ்மீருக்கு பதிலடி கொடுக்க பிளான்.. பாக். திட்டத்தால் என்ன நடக்கும்? தீவிரவாதி ஹபீஸை வைத்து காஷ்மீருக்கு பதிலடி கொடுக்க பிளான்.. பாக். திட்டத்தால் என்ன நடக்கும்?

எவ்வளவு

எவ்வளவு

கடந்த 4 மாதங்களில் மட்டும் இந்த துறையில் மொத்தம் 3,50,000 பேர் வேலையைவிட்டு நீக்கப்பட்டு உள்ளனர். இதில் அதிகமாக டீலர்களிடம் பணிபுரியும் நபர்கள்தான் வேலையை இழந்து உள்ளனர் , 2,40,000 பேர் வரை டீலர் லெவர் நிறுவனங்களில் வேலையை இழந்து உள்ளனர்.

எங்கு எல்லாம்

எங்கு எல்லாம்

இது இல்லாமல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 1,00,000 பணியாளர்கள் வேலையை இழந்து உள்ளனர். அதேபோல் நேரடியாக நிறுவனத்தில் பணி புரியும் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் 15,000 பேர் வேலையை இழந்து உள்ளனர். முக்கிய நிறுவனங்களில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் சிலரும் வேலையை இழந்து உள்ளனர்.

முழு விபரம்

முழு விபரம்

இதற்கு காரணம் அதிகப்படியான வருமாய் இழப்புதான் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் அதிக கார் மற்றும் பைக்குகளை தயார் செய்யும் ஹோண்டா, டிவிஎஸ், மஹிந்திரா, டாட்டா ஆகிய முக்கிய நிறுவனங்கள் எல்லா இந்த இழப்பை சந்தித்து இருக்கிறது. தற்போதைய மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள்தான் இழப்பிற்கு காரணம் என்கிறார்கள்.

வரி

வரி

அதேபோல் அதிகப்படியான வரி விதிப்பும் இழப்பு ஏற்பட ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. இதனால், தற்போது வரியை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு இந்த நிறுவனங்கள் கோரிக்கை வைக்க உள்ளது. ஆனால் அதற்கு முன் இந்த நிறுவனங்களில் இருந்து மேலும் சில பணியாளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

English summary
More than 3 Lakh workers laid off in Auto Mobile field in juts four-month - report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X