சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எச்சரிக்கை உங்கள் செல்போனில் இதை செய்யாதீர்கள்...க்யூ ஆர் கோடு மூலம் பணம் சுருட்டும் கும்பல்

Google Oneindia Tamil News

சென்னை: சும்மா நீங்கள் உங்கள் மொபைலை காட்டினாலே காசு போய்விடும். கியூஆர்கோடு அனுப்பி பணத்தை அபேஸ் செய்யும் திருடர்கள் அதிகமாக உள்ளார்கள். உங்களை நூதன முறையில் பணத்தை பறிக்க வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக வியாபாரிகளை கியூஆர் கோடு மூலம் ஏமாற்றுவது அதிகரித்துள்ளது. எனவே அவர்கள் யாராவது கியூஆர்கோடு அனுப்பி பணத்தை தர ஸ்கேன் செய்ய சொன்னால் எந்த காரணம் கொண்டு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் வியாபாரிகளும் பொதுமக்களுடன் விழிப்புடன் இருப்பது நல்லது.

இப்போது எல்லாம் பெரிய வணிகவளாகங்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள்வரை க்யூ.ஆர் கோடு அட்டையில் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்த முடியும். க்யூ.ஆர் கோடு என்பது வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை உடனடியாக செலுத்துவதற்கான வசதியாகும்(Quick Response). ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து, யாருக்கு பணம் செலுத்தவேண்டுமோ, அவர்களின் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் முறை தான் க்யூ.ஆர் கோடு ஸ்கேன் முறையாகும்.

உயர்ந்தது தீப்பெட்டி விலை.. 1995, 2007ம் ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் அதிகரிப்பு.. காரணம் விலைவாசிஉயர்ந்தது தீப்பெட்டி விலை.. 1995, 2007ம் ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் அதிகரிப்பு.. காரணம் விலைவாசி

பணம் அனுப்பவும் பயன்

பணம் அனுப்பவும் பயன்

பொதுவாக பணம் அனுப்புவதற்கு மட்டும்தான் ஸ்கேன் செய்யவேண்டும். ஆனால் க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்து ஏமாற்றப்பட்டவர்கள் பலரும் பணத்தை ஒருவரிடம் இருந்து பெறுவதற்காக க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்தவர்கள் என்ற விவரமும் வெளியாகி உள்ளது.

வங்கி கணக்கு

வங்கி கணக்கு

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் தளங்களில் இந்த ஏமாற்றங்கள் நடந்துள்ளது . பொருட்களை வாங்குவதாக சொல்லி, பாதிக்கப்பட்டவரிடம் பேசும் நபர், உடனடியாக பணம் அனுப்புவதாக கூறி, ஒரு க்யூ.ஆர் குறியீட்டை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைப்பார். அதனை செய்யும் நபரின் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் க்யூ.ஆர் கோடு அனுப்பிய நபரின் கணக்கிற்கு சென்றுவிடும்.

என்ன ஏமாற்றம்

என்ன ஏமாற்றம்

சென்னையை சேர்ந்த ஒருவர் வாஷிங் மெஷினை விற்பதாகப் பதிவை வெளியிட, சில மணிநேரத்தில் அவருக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், உங்கள் பொருளை நேரடியாக வந்து பார்க்க நேரமில்லை என்றும் ஆனால் தனக்கு பிடித்திருப்பதால், உடனடியாக ரூ. 16,000 செலுத்தி வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். ரமேஷ் தான் கோரிய விலைக்கு ஒருவர் உடனடியாக தனது பழைய வாஷிங் மெஷினை வாங்கிக்கொள்வதாகக் கூறிவிட்டதால், நம்பிக்கையோடு இருந்தார்.

அடுத்த நொடியே மாயம்

அடுத்த நொடியே மாயம்

ஒரு சில நிமிடங்களில் ரமேஷின் வாட்ஸாப்பிற்கு ஒரு க்யூ.ஆர் கோடு வந்தது. வாஷிங் மெஷினை வாங்கிக்கொள்வதாகக் கூறிய நபர், ரமேஷை அந்த க்யூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் உடனடியாக பணம் வந்துவிடும் என்றார். ரமேஷ் ஸ்கேன் செய்த அந்த நொடியில், அவரது வங்கிக் கணக்கில் மொத்தம் இருந்த ரூ.32,000 தொகை அந்த நபரின் கணக்கிற்கு சென்றுவிட்டது.

விழிப்புணர்வு அவசியம்

விழிப்புணர்வு அவசியம்

ரமேஷ் ஸ்கேன் செய்த அந்த க்யூ.ஆர் குறியீடு அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்காக அந்த நபர் அனுப்பிய குறியீடு. பணத்தை இழந்த ரமேஷால், அந்த நபரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. அந்த நபரின் அலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்த கதைகடந்த 2020ல் நடந்தவை. இதேபோல் பல சம்பவங்கள் இன்றும் நடக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

வேண்டாம்

வேண்டாம்

பணத்தை செலுத்துவதற்கு மட்டும் ஸ்கேன் செய்யவேண்டும். பணத்தை மற்றவரிடம் இருந்து பெறுவதற்கு, ஸ்கேன் செய்யவேண்டாம் என்பது பலருக்கு தெரியவில்லை. படித்தவர், படிக்காதவர், இளைஞர், முதியவர் என எந்த பாகுபாடும் இல்லாமல் பலரும் இந்த அந்த க்யூ.ஆர் கோடு ஸ்கேன் மூலமாக ஏமாற்றப்படுகிறார்கள். எனவே யாரும் பணம் தருகிறேன் ஸ்கேன் செய்யுங்கள் என்றால் செய்யாதீர்கள்.

English summary
If you show your mobile, the money will go away. There are more and more thieves who abducted money by sending QR code. You have the opportunity to extort money in an innovative way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X