சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மக்களுக்காக 'செம திட்டம்'! பறந்து பறந்து கொசுக்களை ஒழிக்கும் ட்ரோன்கள்! மாநகராட்சி அசத்தல்

கொசு ஒழிப்பில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் நவீன முன்னெடுப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகராட்சி முழுவதும் ட்ரோன் இயந்திரங்களை கொண்டு கொசுக்களை ஒழிப்பதற்கான புதிய முயற்சியை தொடங்கி வைத்துள்ளார் மேயர் ப்ரியா ராஜன்.

குறிப்பாக கழிவு நீர் கால்வாய்கள், குப்பை கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் கொசுக்களை முற்றிலும் ஒழிப்பதற்கு இந்த ட்ரோன் மிகுந்த உதவிக்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலத்திற்கேற்ப நவீன முறையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதன் மூலம் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கவனம் ஈர்த்திருக்கிறது.

“கொசு” - மேயர் பிரியாவுக்கு 29 வயசுதான்.. மோடி 8 வருசமா பேட்டி கொடுக்கலயே! திமுக சிவசேனாபதி கேள்வி' “கொசு” - மேயர் பிரியாவுக்கு 29 வயசுதான்.. மோடி 8 வருசமா பேட்டி கொடுக்கலயே! திமுக சிவசேனாபதி கேள்வி'

கொசுவால் நோய்கள்

கொசுவால் நோய்கள்

கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, யானைக்கால், என பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கொசுக்களை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு புதிய முயற்சியானது கொசுக்களை அடியோடு ஒழிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர் கால்வாய்

கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகக்கூடிய குப்பை கிடங்குகள், கழிவு நீர் கால்வாய்கள், உள்ளிட்டவற்றில் ட்ரோன் இயந்திரங்களை கொண்டு கொசு மருந்து தெளித்து கொசுக்களை ஒழிப்பதற்கான முன்னெடுப்பை சென்னை மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. சென்னை ஓட்டேரியில் உள்ள நல்லா கால்வாயில் இந்த புதிய முயற்சியை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் தொடங்கி வைத்தார் மேயர் ப்ரியா ராஜன்.

ஒருவர் போதும்

ஒருவர் போதும்

இந்த ட்ரோன் இயந்திரத்தை இயக்குவதற்கு ஒருவரே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ட்ரோன்கள் மூலம் கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டால், நல்ல முடிவுகள் கிடைத்தால், இந்த திட்டமானது அடுத்தடுத்து தமிழகமெங்கும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்கள் செல்ல முடியாத இடத்திற்கு இந்த ட்ரோன் இயந்திரங்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒருவர் போதும்

ஒருவர் போதும்

இந்த ட்ரோன் இயந்திரத்தை இயக்குவதற்கு ஒருவரே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ட்ரோன்கள் மூலம் கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டால், நல்ல முடிவுகள் கிடைத்தால், இந்த திட்டமானது அடுத்தடுத்து தமிழகமெங்கும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்கள் செல்ல முடியாத இடத்திற்கு இந்த ட்ரோன் இயந்திரங்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரோன் இயந்திரத்தை இயக்குவதற்கு ஒருவரே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ட்ரோன்கள் மூலம் கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டால், நல்ல முடிவுகள் கிடைத்தால், இந்த திட்டமானது அடுத்தடுத்து தமிழகமெங்கும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்கள் செல்ல முடியாத இடத்திற்கு இந்த ட்ரோன் இயந்திரங்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன முறை

நவீன முறை

காலத்திற்கேற்ப நவீன முறையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதன் மூலம் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கவனம் ஈர்த்திருக்கிறது.இனி வரும் நாட்களில் சென்னை முழுவதும் குறிப்பாக கூவம் கரையோரங்களில் ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணிகள் முன்னெடுகப்படும் எனத் தெரிகிறது.

English summary
Mayor Priya Rajan has launched a new initiative to eliminate mosquitoes using drone machines across the Chennai Corporation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X