சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெருவாரிப்பேர் இன்று ‘சிக் லீவ்’ எடுத்திருப்பாங்க! பின்னே.. இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா.. விடுவோமா?

இன்று இந்தியர்கள் பெரும்பாலானோர் திடீர் விடுப்பு எடுத்திருப்பார்கள்.. உங்க அலுவலத்திலும் இப்படித்தானா?

Google Oneindia Tamil News

சென்னை : இந்தியாவில் பெரும்பாலான அலுவலகங்களில் இன்று பலர் 'லீவ்' எடுத்திருப்பார்கள். நீங்கள் இன்று அலுவலகம் சென்றீர்களா? உங்க பக்கத்து சீட் நபர் இன்று ஆபீஸுக்கு வந்தாரா? இன்று ஒரு நாள் லீவ் எடுத்தால், மொத்தமாக 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், டூர் பிளான் போட்டு பலரும் இன்று 'சிக் லீவ்' எடுத்திருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.

இந்தியாவில் 95 சதவீதம் பேர் இன்று 'சிக் லீவ்' எடுத்திருப்பதாக நெட்டிசன் ஒருவர் கிண்டலாக போட்ட ட்வீட்டில் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பது என்றால் சும்மாவா? லாங் வீக்கெண்டுக்கு ஒரு வேலை நாளை தியாகம் செய்யலாம் என்ற மைண்ட்செட்டில் பலர் இன்று லீவ் போட்டிருப்பார்கள்.

குடியரசு தின விழா.. தெலுங்கானா அரசு புறக்கணிப்பது புதிது இல்லை.. வாடிக்கையாகிவிட்டது.. தமிழிசை வேதனை குடியரசு தின விழா.. தெலுங்கானா அரசு புறக்கணிப்பது புதிது இல்லை.. வாடிக்கையாகிவிட்டது.. தமிழிசை வேதனை

குடியரசு தின விடுமுறை

குடியரசு தின விடுமுறை

இந்தியாவின் 74வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. குடியரசு தினம் இந்த முறை வியாழக்கிழமை வந்துள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், ஜனவரி 27 - வெள்ளிக்கிழமை இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்தால் நான்கு நாட்கள் சேர்ந்த நீண்ட வார இறுதி விடுமுறை கிடைக்கும்.

திடீர் விடுப்பு

திடீர் விடுப்பு

இதனால், இந்தியர்கள் பெரும்பாலானோர், தாங்கள் பணியாற்றும் அலுவலங்களில் இன்று 'திடீர் விடுப்பு' எடுத்திருப்பார்கள் என கிண்டலாக ஒருவர் ட்வீட் செய்துள்ளார். அவரது பதிவுக்கு பலரும், நாங்கள் இன்று அலுவலகத்திற்குச் சென்றோம் என சோகமாக கருத்துகளைத் தெரிவித்தனர். இதையடுத்து, மீதமுள்ள 5 சதவீதம் பேர் இங்கு கமெண்ட் செக்சனில் தான் இருக்கிறார்கள் என கிண்டலாக அவர் பதிவிட்டுள்ளார்.

டூர் பிளான்

டூர் பிளான்

பொதுவாக, சனி, ஞாயிறோடு சேர்த்து வேறு ஏதாவது அரசு விடுமுறை வந்தால், மக்கள் பெரும்பாலும், எங்காவது டூர் செல்வது, வெளியூர் பயணம் மேற்கொள்வது என பிளான் செய்வார்கள். தற்போது வியாழன், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், இடையே உள்ள வெள்ளியன்று மட்டும் லீவ் போட்டால் மொத்தமாக 4 நாட்கள் லீவ் கிடைக்கும்.

இப்படி சான்ஸ் கிடைக்குமா?

இப்படி சான்ஸ் கிடைக்குமா?

இப்படி பிளான் போட்டு, இன்றும் பெரும்பாலானோர் அலுவலகங்களுக்கு லீவ் போட்டிருப்பார்கள். அதுவும் பெரும்பாலானோர், உடம்பு சரியில்லை என்று கூறித்தான் திடீர் விடுப்பு எடுத்திருப்பார்கள். ஒரே நாளில் எல்லோருக்கும் எப்படி உடல்நிலை சரியில்லாமல் போகும் என மேனேஜர்களுக்கு சந்தேகம் ஏற்படும் தான். என்ன செய்வது? பள்ளிக்கூடத்தில் லீவ் எடுக்க தாத்தா பாட்டிகளையே துச்சமாக நினைத்த நமக்கு இதெல்லாம் பெரிய விஷயமா?

English summary
In most of the offices in India, many people would have taken 'sick leave' today as if they take a day off today, it will be a total of 4 consecutive days off.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X