சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Mother's day... சித்தி பின்னாடி ஓடி ஒளிய.. அங்கேயும் ரெண்டு அடி.. மறக்க முடியாத அம்மா!

Google Oneindia Tamil News

சென்னை: அன்னையர் தினம்.. அம்மாவைப் பற்றிய மலரும் நினைவுகள்...

அம்மா.. இந்த வார்த்தை பிடிக்காதவங்களே இருக்க முடியாதுங்க ! ஆனா எனக்கு பிடிக்காது , என்னடா இந்த பொண்ணு அம்மாவை பிடிக்கலைனு சொல்றாளே அப்படினு தோணுதுங்களா.. ஆனால் அதாங்க உண்மை .

சின்ன வயசுல அதாவது பள்ளி படிப்புனு வச்சுங்கோங்க, அப்போ தம்பி மேலதான் அம்மாக்கு பாசம் அதிகம்னு கோவப்பட்ட நாட்கள். எங்க அம்மாவுக்கும் எனக்குமான உறவை பற்றி இந்த அன்னையர் தினத்துல சொல்லலாம்னு தோணுச்சு.

mothers day without amma we are zero

பொதுவாகவே ஒரு பரவலான நம்பிக்கை அல்லது உண்மை (என்னை பொறுத்தவரையில்) பசங்கனா அம்மாவுக்கும் பொண்ணுங்கனா அப்பாவுக்கும் உரிமை ஆனவங்க அப்படினு நெனைச்சு வாழ்ந்த காலம் அது.

என் தம்பிக்கும் எனக்கும் நிறைய சண்டைகள். வரும் விலக்கி வைக்கிறது யாருனு நினைக்கிறிங்க அம்மாதாங்க. அதுலயும் என்னை அடிச்சுட்டு அவனை சமாதானம் பண்ணுவாங்க. அப்போ வருமே ஒரு கோபம் , உங்கள்ல சில பேர் இதை அனுபவிச்சிருக்கலாம் இல்லாம கூட இருக்கலாம். 10 நாளைக்கு அம்மா கூட பேசாம இருப்பேன்னா பாருங்க.

அவனை விட்டுருவாங்க மாட்டுனது யாரு நான்தானே வடிவேல் பாணில சொல்லனும்னா நைய்யப்புடைத்துவிடுவார்கள். அதான் அப்போ சொன்னது போல அம்மா மேல கோபம் அதிகமா இருக்கும், பிடிக்காது.

ஆனால் அம்மாக்கள் எப்பவுமே கண்டிப்பானவங்கதான். அப்போது தான் குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும் . இதைத்தான் அன்று என் அம்மாவும் செய்தார்கள். பாத்திங்களா சொல்ல வந்ததை விட்டுடனே , பள்ளி மட்டும் இல்லங்க கல்லூரி போன பிறகும் இதுதாங்க தொடர ஆரம்பிச்சுது.

Mother's day: ஆராரிராரோ.. நீங்க அம்மா செல்லமா.. சொல்லுங்கள் எங்களிடமும்!Mother's day: ஆராரிராரோ.. நீங்க அம்மா செல்லமா.. சொல்லுங்கள் எங்களிடமும்!

நான் பண்ற சேட்டை அதிகமாகி அடிக்க ஆரம்பி

ச்சவங்கதான் , பொதுவா நம்ம பண்ற தப்ப நம்ம வெளிய சொல்ல மாட்டோம். இப்டித்தாங்க கல்லூரி செல்லும்போது ஒருநாள் அடிவாங்க முடியாதுனு சித்தி வீட்ல பொய் தஞ்சம் புகுந்துடேன், அம்மாவோட தங்கை தான் புள்ள பாவம்னு ரெண்டு நாள் சோறு போட்டு வீட்டுக்கு போன் போட்டும் சொல்லிட்டாங்க. நல்லதா போச்சு இனிமேல் அடி இல்லைனு இருந்த சித்தி, வீட்ல கொண்டுபோய் விட்டாங்க .

எங்க அம்மா "வரவேற்பே" வேற விதமா இருந்துச்சு. நல்லா செதுக்கி வச்ச தென்னை மட்டையை எடுத்து.. வீட்டை விட்டு வெளிய போவியானு அடி. சித்தி பின்னாடி போய் ஒளிஞ்சு அவங்களுக்கும் நச்சுனு ஒன்னு விழுந்து போங்க கால்லயே. இப்போவும் அந்த அடையாளம் இருக்கும் சித்திக்கு. அது எனக்கு விழுந்திருக்க வேண்டியது.. அன்னைக்கு காப்பாத்தி விட்ட இன்னொரு தெய்வம் சித்திதான்!

அடிச்சுட்டு மருந்தும் போட்டு விட்டு சாப்பாடும் ஊட்டிவிடுவாங்க பாருங்க அதாங்க அம்மா. தேர்வில் தோற்று போய் துவண்டு நிற்கிறப்போ எங்க அம்மா கொடுப்பாங்க பாருங்க ஒரு நம்பிக்கை .அதெல்லாம் வேற மாதிரி ஒரு புத்துணர்ச்சிங்க. போட்டிகளுக்கு போகுறப்போ அப்படி மெருகேற்றுவாங்க. பேச்சு போட்டினாலே எங்க அம்மாதான் வீட்ல எனக்கு நடுவர்.

சரி இதை ஏன் சொல்றேன்னா பெரிய சேட்டைக்காரி.. எப்படியோ போக வேண்டிய வாழ்க்கையை சீரமைச்சது அம்மாதாங்க. பிடிக்காதுன்னு சொன்ன இதே வாய்தான் நீங்க இல்லைனா நான் பூஜ்யம்ன்னு சொல்ல வச்சவங்க எங்க அம்மா.

- திவ்யா

English summary
Nobody can be evolved a complete men or women without mother.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X