சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Mother's day: ஆராரிராரோ.. நீங்க அம்மா செல்லமா.. சொல்லுங்கள் எங்களிடமும்!

Google Oneindia Tamil News

சென்னை: எத்தனையோ தினங்கள்.. காதலர் தினம்.. உழைப்பாளர் தினம்.. ஆனால் எல்லாவற்றையும் விட உயர்வானது தாய்மைதான்.. தாயன்புக்கு நிகருண்டா.. தாய்மைக்கு மாற்று உண்டா.. அன்னையர் தினத்தைப் போல உயர்ந்த தினமும் உண்டா.

இது எப்போது முதல் இந்தியாவுக்கு வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த கொண்டாட்டமெல்லாம் வருவதற்கு முன்பிருந்தே தாய்மையைப் போற்றிய நாடு நம்முடைய நாடு. தாயின் கருவறையை கோவிலாக கருதி வணங்கி வழிபடுவது நம்முடைய பாரம்பரியம். அப்படிப்பட்ட கலாச்சாரத்தில் இன்று தாய்மார்களின் நிலை என்ன.. நிறைய சவால்கள்.. சங்கடங்கள்.. வேதனைகள்.!

 mothers day share your memories about your mother

இந்த அன்னையர் தினத்தில் நாம் தாய்மையைப் போற்றுவோம்.. அதை விட முக்கியமாக இன்று நிலவும் மிகப் பெரிய சவாலான கொரோனா வைரஸ் சூழலில் தங்களது குடும்பம், பிள்ளைகள், பெற்றோர், கணவர் என மொத்தப் பேரையும் மறந்து விட்டு மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் ஓடி ஓடி பணியாற்றிக் கொண்டிருக்கிற தாய்மார்களுக்கு சல்யூட் வைத்து போற்றுவோம்.. இந்த அன்னையர் தினம் அந்த வகையில் இன்னும் ஒரு படி உயர்ந்தது.

அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான அன்பும், பிணைப்பும் எப்போதுமே தனிதான்.. அப்பாவிடம் நாம் எப்படியெல்லாமோ இருப்போம்.. டபாய்ப்போம்.. விளையாடுவோம்.. சீண்டுவோம்.. ஏன் ஏமாத்தக் கூட செய்வோம்.. அப்பாக்கள் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள்.. ஆனால் அம்மாக்களிடம் வாலாட்ட முடியாது.. காரணம் அம்மாக்கள் எப்பவுமே ரொம்ப ஸ்டிரிக்ட்டு.. !.. அதனால்தான் அவர்கள் அம்மாக்கள்.

உங்களுக்கும் உங்களது அம்மாவுக்கும் இடையியலான சுவாரஸ்யத்தை, அன்பை, நினைவுகளை, பாசத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. அனைவரும் சேர்ந்து தாய்மையைப் போற்றுவோம்.

நீங்களும் உங்களது தாயார் குறித்த நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே. அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]

English summary
India is getting ready to celebrate Mother's day and You can share about your memories and interesting bond with your motehrs with us.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X