சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா.. சட்டமாகிடுச்சு.. வாகன ஓட்டிகளே.. மறந்தும் செய்யக்கூடாதவை.. அலற வைக்கும் அபராதங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Motor vehicle act | மத்திய அரசின் அலற வைக்கும் அபராதங்கள்

    சென்னை: மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா சட்ட மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேறி சட்டமாகிவிட்டதால் இனி போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் கடுமையான அபராதம் விதிப்பார்கள். சட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது.

    மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா லோக்சபாவை தொடர்ந்து ராஜ்யசபாவிலும் நிறைவேறியுள்ளது. இந்த மசேதாவில் 93 மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதில் வாகன ஓட்டிகளுக்கு விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் சட்ட திருத்தங்களை கொண்டுவரப்பட்டுள்ளது.

    motor vehicle act amendment 2019 : here the list of revised traffic violation fines

    அவற்றில் சிலவற்றை அப்போது பார்ப்போம்: ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் முன்பு 500 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படும். ஆனால் இனி 5,000 ரூபாய் வசூலிக்கப்படும். குடித்துவிட்டு ஓட்டினால் 1 முன்பு 2000 ரூபாய் அபராதம் விதிப்பார்கள். இனி குடித்தால் வண்டியை தொட்டுக்கூட பார்க்க வேண்டாம். ஏனெனில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பார்கள்.

    ஹெல்மெட் போடாமல் முன்பு வாகனம் ஓட்டினால் எச்சரித்துவிடுவார்கள் அல்லது 100 ரூபாய் அபராதம் விதிப்பார்கள். ஆனால் இனி ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிப்பார்கள். வாகனத்தை இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். சிக்னலை மீறுவது போன்ற வாகனம் ஓட்டும் நபர்கள் செய்யும் சில விதிமீறல்களுக்கு முன்பு 100 ரூபாய். அபராதம் விதிப்பார்கள். ஆனால் இனி அபராதம் 500 ரூபாய். ஆகும்.

    motor vehicle act amendment 2019 : here the list of revised traffic violation fines

    வாகனத்தை விபத்து ஏற்படுத்துவது போல ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதிக எடை சுமந்து சென்றால் முன்பு வெறும் 200 ரூபாய் மட்டுமே அபராதம் விதித்தார்கள். இனி 2000 ரூபாய் அபராதம். விதிப்பார்கள்.18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் அதன் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிப்பார்கள். அத்துடன் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். எனவே சிறுவர்களிடம் உங்களின் வாகனத்தை ஓட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்காதீர்.

    ஆனால் இன்னொரு முக்கியமான விஷயம் இதுதான். போக்குவரத்து போலீசார் தான் இல்லையே.. இன்னைக்கு செக்கிங் வரமாட்டாங்க.. இங்க செக் பண்ண மாட்டங்கா.. என உங்களை சமாதானப்படுத்தி வாகனம் ஓட்டாதீர். அப்படி போக்குவரத்து விதிகளை மீறாமல் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால் இதுவரை இல்லாத அளவுக்கு உங்களை சிக்கலை ஏற்படுத்துவிடும். ஏனெனில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

    English summary
    motor vehicle act amendment 2019 passed rajyasabha: here is complete the list of revised traffic violation fines
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X